தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ht Exclusive: ‘ராஜா ராணி 2’ திடீர் வெளியேற்றம்;1 மில்லியனை தொட்ட பாட்டு; டிமாண்டி காலனி’ 2 -ல் வில்லி! -அர்ச்சனா பேட்டி!

HT Exclusive: ‘ராஜா ராணி 2’ திடீர் வெளியேற்றம்;1 மில்லியனை தொட்ட பாட்டு; டிமாண்டி காலனி’ 2 -ல் வில்லி! -அர்ச்சனா பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
May 28, 2023 07:00 AM IST

இவரின் சமீபத்திய ‘இமைகளோ’ மியூசிக் வீடியோ யூடியூப்பில் 1 மில்லியனை தாண்டியுள்ளது.

Archana ravichandran exclusive interview
Archana ravichandran exclusive interview

ஆதித்யா டிவியில் விஜேவாக தன்னுடைய மீடியா வாழ்க்கையை தொடங்கிய அர்ச்சனா அதன் பின்னர் விஜய் டிவியின் ‘ராஜா ராணி 2’ சீரியலில் வில்லியாக நடித்து மிரட்டினார். இப்போது அந்த சீரியலில் இருந்து வெளியேறியிருக்கும் அவர் போட்டோஷூட், மியூசிக் வீடியோ, சினிமா என அடுத்தக்கட்டத்தை நோக்கிச் செல்வதற்கான வேலைகளில் மும்மரமாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இவரின் சமீபத்திய ‘இமைகளோ’ மியூசிக் வீடியோ யூடியூப்பில் 1 மில்லியனை தாண்டியுள்ளது. அவரிடம் உரையாடியதில் இருந்து..

ட்ரெண்டிங் செய்திகள்

விஜே அர்ச்சனாவிலிருந்து அர்ச்சனா ரவிச்சந்திரன் - ஏன் இந்த பெயர் மாற்றம்?

நான் இன்ஸ்டாகிராமுல விஜே அர்ச்சனான்னு பெயர் வச்சப்ப சேனல்ல உள்ளவங்க விஜேன்னு உன்ன நீயே சொல்லிக்கக்கூடாது மத்தவங்க சொல்லனும்னு சொன்னாங்க. அந்த சமயத்துல அவங்க எல்லாரும் என்ன விட சீனியர். அதனால அவங்ககிட்ட என்னால எதுவும் சொல்ல முடியல.

அதுக்கப்புறமா நான் விஜய் டிவியில சேர்ந்தப்ப அந்தப்பேர் ஒரு பிராண்டா மாறிடுச்சு. இப்ப நான் விஜேவா வொர்க் பண்ணல ( நல்ல வாய்ப்பு என்றால் பண்ணுவேன்). இப்ப மியூசிக் வீடியோ, சினிமா அப்படின்னு நிறைய புது விஷயங்கள செய்ய முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.

இந்த மாதிரி பண்ணும் போது நான் என்ன விஜேன்னு காண்பிக்க வேண்டாம்னு நினைச்சேன். சினிமாவுல கூட வாய்ப்பு வரும் போது விஜேன்னா வேண்டாம்.. நல்ல ஆக்டர் யாராவது இருந்தா சொல்லுங்கன்னு சொல்றாங்க.. விஜேவ விட ஆக்டிங் என்னோட திறமைக்கு இன்னும் நல்லா பொருந்தும்னு நினைக்கிறேன். இன்னொன்னு ரவிச்சந்திரன் அப்படிங்கிறது என்னோட அப்பா பெயர். அதனாலத்தான் இந்த மாற்றம்.

சீரியல்ல இருந்து தொடர்ந்து ஆட்கள் வெளியே வந்துகிட்டே இருக்காங்களே? சீரியல்ல அழுத்தம் அதிகமா இருக்கா?

பிரஷர் இல்லாத வேலைன்னு இங்க எதுவும் இல்ல. ஆனா நான் கொஞ்சம் ரிலாக்ஸான ஆளு. எனக்குன்னு பர்சனல் டைம் வேணும். 4 வாரம் கஷ்டப்பட்டு உழைப்பேன். அதுக்கப்புறம் எனக்கு ஒரு வாரமாது ஃப்ரீ டைம் வேணும்.

சீரியலில் நடிக்கும் போது எனக்கு ஒரு நாளோட மொத்த நேரமும் சீரியலிலேயே போயுறுது. ஒரு கட்டத்தில் எனக்கு அது இயந்திரத்தன்மையா பட்டுச்சு. சீரியல்ல நல்ல வருமானம்தான். இருந்தாலும் அந்த கம்ஃபோர்ட்டால புதுசா நான் எந்த விஷயத்தையும் முயற்சி பண்ணாம இருக்கனோன்னு எனக்குள்ள ஒரு பயம் வந்திடுச்சு. அதனாலத்தான் இந்த முடிவு. இப்ப என்னால நிறைய விஷயங்களை செய்ய முடியுது. கத்துக்க முடியுது. இந்த வயசுலதான் என்னால ரிஸ்க் எடுக்க முடியும்.

‘இமைகளோ’ மியூக் வீடியோ பற்றி?

எனக்கு முதல்ல அந்த மியூசிக்கோட ட்ராக் அனுப்புனாங்க. எனக்கு அது ரொம்ப பிடிச்சிருந்தது. இதுல எங்கூட நடிச்ச அனிவீயும் நானும் நல்லாவே ஜெல் ஆயிட்டோம்.

எங்களுக்குள்ள நல்லாவே ஒத்துப்போச்சு. நாங்க இயல்பா சில விஷயங்கள் பண்ணிக்கிட்டே இருந்தோம். கேமரா ரோல் ஆயிட்டே இருந்துச்சு. அது ஒரு ஷூட் மாதிரியே தெரியல. மியூசிக் வீடியோவ பாத்த அம்மா அப்பாவும் ஹேப்பி.

‘டிமாண்டி காலனி 2’ படத்துல நடிக்கிறீங்க எப்படி போயிட்டு இருக்கு?

அந்தப்படத்துல எனக்கு சின்ன ரோல்தான். ஆனா அந்த ரோல் எல்லாருடைய மனசுலயும் நிக்கும்னு தோணுச்சு. இன்னும் சொல்லனும்னா அது ‘ராஜா ராணி 2’ அர்ச்சனாதான். கிட்டத்தட்ட ஒரு வில்லி மாதிரியான கதாபாத்திரம்தான் அது.

சினிமாவுல ஒவ்வொரு சீனுக்கும் அவ்வளவு உழைப்பு போடுறாங்க. படத்தோட டீமும் எனக்கு நல்ல ஸ்பேஸ் கொடுத்தாங்க. அதனால என்னாலயும் எல்லா விஷயங்களையும் சொல்ல முடிஞ்சது. வரும் காலத்துலயும் கதையில முக்கியத்துவம் இருக்குற மாதிரியான கதாபாத்திரங்கள எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருக்கேன்.

நெகட்டிவிட்டியை எப்படி ஹேண்டில் பண்றீங்க?

நான் ஒன்னுமே பண்றது இல்ல. சீரியல்ல எனக்கு அறிமுகமே வில்லி கதாபாத்திரம். அதுவே கொஞ்சம் மக்கள அவங்கள அறியாம என்ன நெகட்டிவா பாக்க வச்சிருக்கு. சோசியல் மீடியாவுல ஒருத்தர பத்தி கமெண்ட் பண்ற ஒருவர சம்பந்தப்பட்ட நபரால  உடனே நேரா அணுக முடியாது. இங்க இது ஒரு வசதியா இருக்கு. இது சோசியல் மீடியாவோட கருப்பு பக்கம். அதனால அத பெரிசா கண்டுக்குறது இல்ல.” என்று சொல்லி விடை பெற்றார்.