Archana mariyappan: ‘பேன்ட்டை மேல இழு..' - சீரியல் நடிகையை விட்டு வைக்காத பெரிய இயக்குநர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Archana Mariyappan: ‘பேன்ட்டை மேல இழு..' - சீரியல் நடிகையை விட்டு வைக்காத பெரிய இயக்குநர்

Archana mariyappan: ‘பேன்ட்டை மேல இழு..' - சீரியல் நடிகையை விட்டு வைக்காத பெரிய இயக்குநர்

Aarthi V HT Tamil
Sep 21, 2023 06:00 AM IST

சீரியல் நட்சத்திரம் அர்ச்சனா மாரியப்பன் தனக்கு நேர்ந்த துரதிர்ஷ்டவசமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அர்ச்சனா மாரியப்பன்
அர்ச்சனா மாரியப்பன்

பிரபல தமிழ் சீரியல்களில் வில்லன் வேடங்களில் தோன்றிய இவர் பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் சீரியல் நட்சத்திரம் அர்ச்சனா மாரியப்பன் தனக்கு நேர்ந்த துரதிர்ஷ்டவசமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

சமீபத்தில் ஒரு முன்னணி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அர்ச்சனா, " அவர் பெரிய டைரக்டர், அவர் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அவரிடம் ஆடிஷனுக்குப் போனேன். படத்தில் நான் செவிலியராக நடிக்கிறேன் என்றார்கள். நர்ஸ் வேடத்தில் இருப்பீர்கள் என சொன்னதும் நான் சரி என்ற மனநிலமைக்கு வந்துவிட்டேன். ஒரு வாரம் ஷூட்டிங் இருக்கு என்றார்.

அப்போது அனைத்து உதவி இயக்குநர்களும் வெளியே சென்றுவிட்டனர். அன்று நான் சல்வார் அணிந்திருந்தேன். அப்போது டைரக்டர் என்னிடம், 'உன் பேன்ட்டை முழங்கால் வரை இழு' என்றார். ஏன் சார் என நான் கேட்டேன். செவிலியர் வேடத்தில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன் என்றார்.

சரி என்று சொல்லி, கால்சட்டையை முழங்கால் வரை தூக்கினேன். அவ்வளவு தூக்கியதும் கொஞ்சம் மேலே தூக்கச் சொன்னார். அப்போது தான் அவருக்கு வேறு நோக்கங்கள் இருப்பதை உணர்ந்தேன். அவர் பெரிய இயக்குநர் என்பதால் என்னால் அவருடன் வாதிட முடியவில்லை.

நானும் நாளை வந்து காஸ்ட்யூம் போட்டுக் கொள்கிறேன் என்று அந்த அலுவலகத்தை விட்டு வெளியே ஓடி வந்தேன்' என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.