Aravind swamy: “விதை அவர் போட்டது.. ஒரு விஷயம் லைஃப்-க்கு பத்தாது..” அரவிந்த் சாமியின் பிசினஸ் இன்ஸ்பிரேஷன் யார்?
Aravind swamy: இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக, அவருடைய 18 வது வயதில், கல்கத்தா சென்ற அவர் அங்கு நிறைய வேலைகளை செய்தார். என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கிறதோ, அவை அனைத்தையும் பயன்படுத்தினார். அதன் வழியாக அவர் வாழ்வில் மிக உயரிய இடத்தை அடைந்தார். - அரவிந்த் சாமி!
பிரபல நடிகரான அரவிந்த் சாமி அண்மையில் தொகுப்பாளர் கோபிநாத் சேனலுக்கு கொடுத்த பேட்டியானது சமூகவலைதளங்களில் வைரலானது. அதில், அவர் வாழ்க்கைப் பற்றியும், பணத்தை கையாள்வது குறித்தும், பிசினஸ் குறித்தான அவரது பார்வையையும் பகிர்ந்திருந்தார். அவை அனைத்தும் மக்கள் மத்தியில் பெரிய கவனத்தை பெற்று இருக்கிறது. இந்த நிலையில், அரவிந்த் சாமி பிசினஸ் செய்வதற்கு அவரது தந்தையும் பிரபல தொழிலதிபருமான வி.டி. சுவாமிதான் காரணம் என்று, கடந்த 7 வருடங்களுக்கு முன்னதாக, சினிமா பேசலாம் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!
அப்பாதான் இன்ஸ்பிரேஷன்
இது குறித்து அரவிந்த் சாமி பேசும் போது, “நான் பிசினஸில் களமிறங்குவதற்கு என்னுடைய அப்பாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக, அவருடைய 18 வது வயதில், கல்கத்தா சென்ற அவர் அங்கு நிறைய வேலைகளை செய்தார். என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கிறதோ, அவை அனைத்தையும் பயன்படுத்தினார். அதன் வழியாக அவர் வாழ்வில் மிக உயரிய இடத்தை அடைந்தார்.
அவர் அந்த அனுபவங்களையெல்லாம் என்னிடம் பகிர்வார். அதைக் கேட்கும் பொழுது, இவற்றையெல்லாம் நீங்கள் முயற்சி செய்திருக்கிறீர்களே என்று பொறாமையாக இருக்கும். காரணம், அவர் நிறைய விஷயங்களை மிகவும் தைரியமாக செய்திருந்தார். சிறுவயதாக இருக்கும் பொழுதே அவருடைய தாக்கம் எனக்குள் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
மல்டி டாஸ்க்கிங்
அதாவது, ஏதாவது ஒரு விஷயத்தை மட்டும் நீ செய்து கொண்டிருந்தால், அது ஏதோ ஒரு திருப்தி இல்லாத தன்மையை கொடுக்கும் என்றும், நமக்கு தோன்றுகிற விஷயங்கள் அனைத்தையும் நாம் முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர்தான் எனக்குள் புகுத்தினார். அதன் வழியாக, அதிலும் கடுமையாக உழைத்து, அதிலிருந்து ஒரு நல்ல விஷயத்தை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய வாழ்வின் நோக்கமாக மாறியது. அதனால், தெரியாத விஷயத்தை கற்றுக்கொள்ளும் ஆர்வம் என்னுடைய இயல்பாகவே மாறிவிட்டது.
நான் ‘ரோஜா’ படத்தில் நடிக்கும் பொழுது எனக்கு 21 வயது. ஆனால், நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு வரவில்லை. ஆனால், வந்த பிறகு அதை ஒழுங்காக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. அது தொழில் நுட்ப ரீதியான விஷயங்களாக இருந்தாலும் சரி, இன்ன பிற விஷயங்களாக இருந்தாலும் சரி. ‘தளபதி’ படத்தில் மணிரத்னம், கேமராமேன் சந்தோஷ் சிவன் ஆகியோருடன் வேலை செய்யும் போது, அவர்கள் செய்பவற்றை அனைத்தையும் கற்றுக்கொள்ள முயன்றேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு காசும் கொடுத்து எனக்கு தொழில் கற்றும் கொடுத்தார்கள்.” என்று பேசினார்.
கடந்த 1 வருடத்திற்கு முன்னதாக டெல்லி குமார் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அரவிந்த் சாமி குறித்து பேட்டிக்கொடுத்தார். அந்தப்பேட்டியையும் நீங்கள் படிக்கலாம்.
இது குறித்து பேசும் போது, “ அரவிந்த்சாமி என்னுடைய மகன்தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவரும், நானும் அப்பா மகனாக நடிக்கவில்லையே என்று கேட்கிறீர்கள். இந்த இடத்தில் நானும் அவரும் அப்பா, மகனாக ஏன் நடிக்கவில்லை என்ற கேள்வியைத் தவிர்த்து, நானும் அவரும் அந்த மாதிரி நடிக்கும் போது, அதில் அப்பாவிற்கான கதாபாத்திரம் அந்தளவு முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நாங்கள் நடிப்பதற்கு நல்ல முக்கியத்துவம் இருந்து, வாய்ப்பு கிடைத்து இருந்தால் நிச்சயமாக நடித்திருக்கலாம்.
அவர் பிறந்த உடனேயே அவரை நாங்கள் சகோதரிக்கு தத்தெடுத்து கொடுத்து விட்டோம். அவர் அவர்களின் குடும்பத்தோடு ஐக்கியமாகிவிட்டார். அதனால் எங்கள் வீட்டுக்கு அவர் வருவது போவது எல்லாம் எப்போதாவது ஒருமுறைதான் ஏதாவது குடும்ப நிகழ்வு என்றால் வந்து செல்வார் அவ்வளவு தான்.” என்று பேசினார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்