தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Khushbu Sundar: ‘பெண்களை ரொம்ப மோசமா ஸ்கிரீன்ல காட்ட.. நான் ஒன்னும் போதனை பண்ண படம் எடுக்கல’ - குஷ்பு பேட்டி

Khushbu Sundar: ‘பெண்களை ரொம்ப மோசமா ஸ்கிரீன்ல காட்ட.. நான் ஒன்னும் போதனை பண்ண படம் எடுக்கல’ - குஷ்பு பேட்டி

Kalyani Pandiyan S HT Tamil
May 31, 2024 04:28 PM IST

Khushbu Sundar: பெண்களை திரையில் மோசமாக காட்ட வேண்டியதில்லை. அவளது உணர்ச்சிகள் ஒரு உறவில் காயப்படுவதையும், அது வாழ்க்கையின் ஒரு பகுதி என்றும் நீங்கள் முன் வந்து கூறத்தேவையில்லை. நான் அதனை ஆதரிக்கப்போவதும் இல்லை - குஷ்பு பேட்டி

Khushbu Sundar:  ‘பெண்களை ரொம்ப மோசமா ஸ்கிரீன்ல காட்ட.. நான் ஒன்னும் போதனை பண்ண படம் எடுக்கல’ - குஷ்பு பேட்டி
Khushbu Sundar: ‘பெண்களை ரொம்ப மோசமா ஸ்கிரீன்ல காட்ட.. நான் ஒன்னும் போதனை பண்ண படம் எடுக்கல’ - குஷ்பு பேட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

குஷ்பு பேட்டி

இது குறித்து அவர் பேசும் போது, “ நான் பெண்களை மையப்படுத்திய கதைகளை மட்டுமே தயாரிப்பேன் என்று சொல்லும் வகையிலான தயாரிப்பாளர் அல்ல. எனக்கும்  "டார்லிங்ஸ்", "பதாய் ஹோ" மற்றும் “க்ரூ” போன்ற கதைகளை தயாரிக்க விருப்பம்தான். ஆனால் துர்திஷ்டவசமாக, தென்னிந்தியாவில் அது போன்ற படங்களுக்கு மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் போதுமான பார்வையாளர்கள் வருவதில்லை. 

அதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும். ஆகையால் எதிர்காலத்தில் நான் அது போன்ற திரைப்படங்களை தயாரிப்பேன். பதாய் ஹோ படமானது தமிழில் ரீமேக் (வீட்ல விஷேசம்) செய்யப்பட்டது. ஆனால் அந்தப்படம் சரியாக செல்ல வில்லை. நீங்கள் ஒரு பெண்ணை திரையில் மோசமாக காட்ட வேண்டியதில்லை. அவளது உணர்ச்சிகள் ஒரு உறவில் காயப்படுவதையும், அது வாழ்க்கையின் ஒரு பகுதி என்றும் நீங்கள் முன் வந்து கூறத்தேவையில்லை. நான் அதனை ஆதரிக்கப்போவதும் இல்லை. 

கமர்ஷியல் படங்கள்: 

எனக்கு கமர்ஷியலான திரைப்படங்கள் எடுப்பது பிடிக்கும். மற்றபடி, நான் திரையில் போதனையெல்லாம் எடுக்கவெல்லாம் இங்குபடம் எடுக்க வர வில்லை. தற்போது தயாரிக்கப்படும் திரைப்படங்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இன்னமும், கதாநாயகன் பெயரை வைத்துதான் படம் விற்பனை செய்யப்படுவதாகவும், அதில் கதாநாயகியின் பங்கு மிககுறைவு என்று நினைக்கும் ஹீரோக்கள் இருக்கின்றனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு படத்தை கதாநாயகி முழுவதுமாக தன்னுடைய தோளில் தாங்கி கொண்டு செல்வது சிறப்பான விஷயம். ஆகையால் ஒரு வெற்றிப்படத்தை கொடுப்பதற்கு நீங்கள் கதாநாயகனை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இங்கு கதைதான் கதாநாயகன். இந்த மாற்றம் உண்மையில் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.” என்று பேசினார். 

முன்னதாக குஷ்பு தன்னுடைய காதல் வாழ்க்கை பிரச்சினைகள் குறித்து பேசிய பேட்டி இங்கே!

இது குறித்து அவர் பேசும் போது, “ நானும் சுந்தர் சியும் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் காதலித்தோம். அதன் பின்னர்தான் திருமணம் செய்து கொண்டோம். உண்மையில் சொல்லப் போனால் சுந்தர்சியுடன் இணைந்து நான் வளர்ந்திருக்கிறேன்.எங்களுடைய குடும்ப வாழ்க்கையில் எப்பொழுதுமே இன்பம் மட்டுமே இருக்கும் என்று சொல்ல முடியாது. எங்களுக்குள் சண்டையே வராது, எங்களுக்குள் கசப்பான விஷயங்கள் இல்லை என்றெல்லாம் பொய் சொல்ல முடியாது. 

சராசரி கணவன் மனைவிக்குள், என்னென்ன பிரச்சினைகள் வருமோ அது எங்களுக்கும் வந்திருக்கிறது. எங்கள் இரண்டு பேருக்கும் இடையே உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், நீ எனக்காக இப்படி மாறு..நான் உனக்காக அப்படி மாறுகிறேன் என்று ஒருவருக்கொருவர் சொன்னதே கிடையாது. ஒருவரை ஒருவர், நாங்களே நன்றாக புரிந்து கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வந்தோம். இன்றைக்கு ஒரு பிரச்சினை என்றால், அந்தப் பிரச்சினை குறித்து பத்து நாட்கள் கழித்து, மீண்டும் பேச மாட்டோம்.

பிரச்சினையை விட்டு விடுவோம்

ஒரு பிரச்சினையை ஒரு நேரத்தில் பேசினால், அத்தோடு அந்த பிரச்சினையை விட்டு விடுவோம். நாங்கள் சினிமா துறையில் இருப்பதால், ஒருவரின் மீது ஒருவருக்கு அதீத நம்பிக்கை வேண்டும். காரணம், இங்கு எங்களைப் பற்றி அதிகமான செய்திகள், வதந்திகள் வெளிவரும். அதே சமயத்தில், ஒன்று என்றால், பத்து சொல்வதற்கு இங்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஒரு விஷயம் என்னுடைய காதுக்கு வருவதற்குள், அது 10 பேருக்கு, 10 விதமாக சென்று சேர்ந்திருக்கும். ஆனால், இதுவரை நான் அவரிடமோ, அவர் என்னிடமோ எந்த ஒரு கேள்வியும் கேட்டது கிடையாது.

எங்களைப் பொறுத்தவரை நம்பிக்கைதான் வாழ்க்கை. அதைவிட பெரிய விஷயம் என்னவென்றால், ஒருவரின் மீது ஒருவர் வைத்திருக்கும் மரியாதை. அவர் எனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் வெளியில் இருந்து யாரும் எனக்கு மரியாதை கொடுக்க மாட்டார்கள். அதேபோல, நான் அவரிடம் எந்த அளவு மரியாதை வைத்திருக்கிறேன் உள்ளிட்டவற்றையெல்லாம் கலந்ததுதான் வாழ்க்கை.

என்னுடைய வாழ்க்கையிலும், ஒரு கட்டத்தில் ஏன் இவரை கல்யாணம் செய்து கொண்டோம் என்று நினைத்த காலம் வந்திருக்கிறது. அவருக்கும் அதே போன்றதொரு காலம் வந்திருக்கிறது. ஆனால் அந்த சமயங்களில் எல்லாமே ஒருவரின் மீது ஒருவர் வைத்திருந்த காதல், அன்பு உள்ளிட்டவை எங்களை இவ்வளவு வருடங்கள் பயணிக்க வைத்திருக்கிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்