கொஞ்சமாவது... ஏன் இப்படி பண்றீங்க.. ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு அப்பா போல.. தயவு செய்து இத்தோடு நிறுத்துங்க - மோகினி டே
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கொஞ்சமாவது... ஏன் இப்படி பண்றீங்க.. ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு அப்பா போல.. தயவு செய்து இத்தோடு நிறுத்துங்க - மோகினி டே

கொஞ்சமாவது... ஏன் இப்படி பண்றீங்க.. ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு அப்பா போல.. தயவு செய்து இத்தோடு நிறுத்துங்க - மோகினி டே

Kalyani Pandiyan S HT Tamil
Nov 26, 2024 08:30 AM IST

ரஹ்மான் சாரையும், என்னையும் இணைத்து வைத்து வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பாகவும், நம்ப முடியாதவையாகவும் இருக்கிறது. கடந்த 8.5 வருடங்களாக ஒரு குழந்தை போலதான் அவரின் படங்கள், இசைக்கச்சேரிகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகிறேன். - மோகினி டே காட்டம்!

கொஞ்சமாவது... ஏன் இப்படி பண்றீங்க.. ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு அப்பா போல.. தயவு செய்து இத்தோடு நிறுத்துங்க - மோகினி டே
கொஞ்சமாவது... ஏன் இப்படி பண்றீங்க.. ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு அப்பா போல.. தயவு செய்து இத்தோடு நிறுத்துங்க - மோகினி டே

பரபரப்பை கிளப்பிய அறிக்கை

இந்த அறிக்கை இந்திய சினிமாவையே பரபரப்புக்கு உள்ளாக்கியது. இது தொடர்பான பேச்சு அடங்கி முடிவதற்குள், ஏ.ஆர். ரஹ்மானிடம் பல ஆண்டுகளாக கிட்டாரிஸ்ட்டாக பணியாற்றும் மோகினி டே தன்னுடைய கணவரை பிரிவதாக அறிவித்தார். இந்த நிலையில், ரஹ்மானையும், மோ கினியையும் இணைத்து வைத்து பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். இந்த நிலையில், சாய்ரா பானுவின் வழக்கறிஞர், சாய்ரா பானு, மோகினி டே உள்ளிட்டோர் அதற்கு மறுப்பு தெரிவித்து பதிவுகளை வெளியிட்டதோடு, பிரைவசிக்கு மதிப்பு அளிக்குமாறும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

வீடியோவை வெளியிட்ட மோகினி

இந்த நிலையில் மோகினி டே மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதனுடன் இணைத்திருக்கும் பதிவில்," ரஹ்மான் சாரையும், என்னையும் இணைத்து வைத்து வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பாகவும், நம்ப முடியாதவையாகவும் இருக்கிறது. கடந்த 8.5 வருடங்களாக ஒரு குழந்தை போலதான் அவரின் படங்கள், இசைக்கச்சேரிகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகிறேன்.

மரியாதை, அனுதாபம், பரிவு

மரியாதை, அனுதாபம், பரிவு உள்ளிட்டவை இல்லாமல் ஒருவரின் எமோஷலான நிகழ்வை இப்படியான முறையில் அணுகுவது மனதை உடைய வைக்கிறது. ஏ. ஆர். ரஹ்மான் மிகச்சிறந்த ஆளுமை, அவர் எனக்கு அப்பா போல.. இது போன்ற நிகழ்வில் பாதிக்கப்பட்டு இருக்கும் நபர்களின் மனநிலையை தெரிந்து கொள்ளாமல், இப்படி தவறான தகவல்களை பரப்புவது சரியல்ல. ஆகையால் கொஞ்சமாவது உணர்வுப்பூர்வமாக நடந்து கொள்ளுங்கள். இனி மேல் இது போன்ற தகவல்களை வெளியிடுவதை நிறுத்துங்கள்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

முன்னதாக, சாய்ரா பானு," இந்த விவகாரம் குறித்து முன் வந்து பேசி இருந்தார்

இதுதொடர்பாக சாய்ரா பானு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’எல்லோருக்கும் எனது நண்பகல் வணக்கம். இங்கே பேசுறது சாய்ரா பானு. நான் இப்போது மும்பையில் இருக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலமின்மையால், சந்தோஷமாக இல்லை. அதனால் தான் நான் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிகிறேன்.

நான் ஒட்டுமொத்த யூடியூபர்களுக்கும் தமிழ் ஊடகத்தினருக்கும் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், அவரைப் பற்றி தவறாக செய்திபோடாதீர்கள்.

மனிதர்களில் அவர் ஒரு ரத்தினம். உலகத்திலேயே சிறந்த மனிதர். ஆம். எனது உடல்நிலைப் பிரச்னைகளால் நான் மும்பையில் சிகிச்சைப் பெற்று வருகின்றேன்.

ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில் அவரது பணிகளில் பிஸியாக இருக்கிறார். அதனால் யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. எனக்கு நிறைய கவனிப்பு வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு அற்புதமான மனிதர். அவரை யாருடனும் தொடர்புபடுத்தி பேசாதீர்கள். அவரை நான் வாழ்நாள் முழுவதும் நம்புவேன். அந்தளவுக்கு நான் அவரை விரும்புகிறேன். அவரும் என்னை விரும்பினார்.

அவர் மீதான பொய்யான குற்றச்சாட்டுகள் எல்லாத்தையும் நிறுத்தவேண்டும் எனத் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

கடவுள் ஆசீர்வதிக்கட்டும். அவரை தனிமையில் விட்டு வந்தபின், அவருக்குண்டான இடத்தைக்கொடுக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன். இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் நாங்கள் அறிவிக்கவில்லை. என்னுடைய சிகிச்சைகளை முடித்தபின் நான் சென்னைக்கு வருவேன். எனவே, ஏ.ஆர். ரஹ்மான் பற்றி அவதூறு பேசுவதை தயவுசெய்து நிறுத்துங்கள். அப்படி செய்வது ஒரு குப்பைத்தனம். அவர் ஒரு வைரம் போன்ற மனிதர்'' என சாய்ரா பானு உருக்கமாகப் பேசி இருந்தார்.

வருத்தப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான் உடைய பதிவு:

விவாகரத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், வலியோடு உறுதிப்படுத்தி இருந்தார்.

அதில், "நாங்கள் எங்களின் முப்பதாவது திருமண நாளை கொண்டாடுவோம் என்று நம்பினோம். ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இன்னும், இந்த சிதைவில் துண்டுகளாகிப் போன நாங்கள் மீண்டு வர முடியாமல் போனாலும், இந்த நிலைக்கான அர்த்தத்தைத் தேடுகிறோம்.

நாங்கள் பலவீனமாக உள்ள இந்த நாட்களைக் கடக்கும்போது, எங்கள் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைக்கு மதிப்பும் மரியாதையும் அளித்த அழைத்து நண்பர்களுக்கும் நன்றி" என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.