Khatija Rahman: ‘கிழவி மாதிரி இருக்காதன்னு சொன்னாங்க.. நான் பொய்யா வாழ விரும்பல’ - ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!
நான் முதலில் எனக்கு உண்மையாக இருக்க முயற்சி செய்கிறேன். நான் பொய்யாக வாழ விரும்பவில்லை. நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருக்கும் பொழுது, சில விஷயங்கள் தானாகவே வெளிப்படும் என்று நான் நினைக்கிறேன்.
ஏ.ஆர்.ரஹ்மானின் மகளான கதீஜா ரஹ்மான் தன்னுடைய பர்சனல் பக்கங்கள் குறித்து அண்மையில் வாவ் லைஃப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “என்னுடைய குரல் நன்றாக இருக்கிறது என்று நீங்கள் சொல்லும் பொழுது, நாங்கள் நிச்சயமாக அதற்காக உழைக்கிறோம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், நான் எனக்கு மிகவும் உண்மையாக இருக்கிறேன் என்பது இங்கு மிகவும் முக்கியமானது.
நான் முதலில் எனக்கு உண்மையாக இருக்க முயற்சி செய்கிறேன். நான் பொய்யாக வாழ விரும்பவில்லை. நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருக்கும் பொழுது, சில விஷயங்கள் தானாகவே வெளிப்படும் என்று நான் நினைக்கிறேன்.
எனக்கு பொய்யாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. காரணம், வாழ்க்கை என்பது மிக மிக குறுகியது. நான் என்னுடைய வாழ்க்கையில் இந்த விஷயங்களை செய்யாமல் விட்டு விட்டோமே என்று வருந்துதியதே கிடையாது.
என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை பலர் நிகழ்த்தி சென்று இருக்கிறார்கள். என்னுடைய சகோதரி என்னுடைய மிகப்பெரிய பலம் என்று நான் சொல்வேன். அதேபோல என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய அப்பா,தம்பி என்னுடைய கணவர் ஆகிய மூன்று பேரும் முக்கியமானவர்கள். அவர்கள் எப்போதும் எனக்காக நின்று இருக்கிறார்கள்.
நான் சில விஷயங்களை காரசாரமாக பேசும் பொழுது, இந்த வயதில் உங்களுக்கு ஏன் இந்த வேலை என்று சுற்றி இருந்தவர்கள் யோசித்தார்கள். கல்லூரி சென்றால் என்னுடைய நடை,உடை பாவனை எல்லாம் மாறிவிடும் என்று சொன்னார்கள்.
இன்று எனக்கு என்ன தோன்றுகிறதோ? அதை செய்கிறேன் நாளைக்கு எனக்கு என்ன தோன்றுமோ அதை செய்வேன். உடன் இருப்பவர்கள் என்ன கிழவி மாதிரி நடந்து கொள்கிறாய் என்றெல்லாம் கேட்பார்கள்... நான் அவர்களை நீங்கள் இப்படி இருங்கள் என்று எதையும் சொல்லவில்லை. அப்படி இருக்கும் பொழுது, நீங்கள் ஏன், நான் செய்வதைப் பற்றி கவலைப்படுகிறீர்கள்.. இப்போது திரும்பி பார்க்கும் போது,இவள் மட்டும் கலாச்சாரத்தை இவ்வளவு ஒத்து வாழ்கிறாளே, நம்மால் அப்படி வாழ முடியவில்லையே என்ற ஏக்கத்தின் வெளிப்பாடோ அது என்று எனக்கு அவ்வப்போது தோன்றும். ஆனால் நான் எனக்கு உண்மையாக இருக்கிறேன் அவ்வளவுதான்” என்று பேசினார்.
முன்னதாக, ஏ. ஆர். ரஹ்மான் தன்னுடைய மகள் கதீஜாவிற்கு தன்னிடம் வேலை பார்த்த சவுண்ட் இன்ஜினியரை திருமணம் செய்து வைத்தது குறித்தும், ரஹ்மான் மீது மத ரீதியான தாக்குதல் தொடுக்கப்படுவது குறித்தும் பத்திரிகையாளர்கள் சுபீர் ஆகாயம் தமிழ் சேனலுக்கு கொடுத்த பேட்டி மற்றும் கம்பீரன் திரைக்கடல் சேனலுக்கு கொடுத்த பேட்டி ஆகியவற்றின் தொகுப்பை பார்க்கலாம்.
கம்பீரன் பேசும் போது, "ஏ ஆர் ரஹ்மான் அவர்களது பிள்ளைகளுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார். தான் சொல்வதை தான் செய்ய வேண்டும் என்று அவர் என்றைக்குமே அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியது இல்லை. தன்னுடைய மகளை தன்னிடம் உதவியாளராக இருந்த ஒரு சவுண்ட் இன்ஜினியருக்கு தான் அவர் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.
கதிஜாவினுடைய திருமணம் ஏ ஆர் ரஹ்மான் உடைய தற்போதைய அந்தஸ்துக்கான திருமணமா என்று நீங்கள் கேட்டால் நிச்சயமாக இல்லை என்பதே பதிலாக இருக்கும்.
ஏ ஆர் ரஹ்மான் அந்த பையனுடைய கேரக்டரை பார்த்தார். மிகவும் நல்ல கேரக்டர் என்பது என்று தெரிந்தது. உடனே கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்து மிகவும் எளிமையான முறையில் அந்த கல்யாணத்தை நடத்தினார். " என்று பேசினார்
சுபீர் பேசும் போது, "அவர் பிற்போக்கு மனநிலை கொண்டவர் என்ற விமர்சனம் வெளியில் வைக்கப்படுகிறது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அது அவரது மகள் பர்தா போட்டு இருப்பதை குறிப்பிட்டு சொல்கிறார்கள்.
அவருக்கு மொத்தம் இரண்டு மகள்கள். அந்த இரண்டு மகள்களில் ஒரு மகள் மிகவும் மாடலாக இருப்பவர். அவரை ரஹ்மான் எதையுமே சொல்லவில்லை.
அவருக்கு என்ன விருப்பமோ அப்படி இரு, என்ற பாதையில் விட்டு விட்டார். இரண்டாவது மகள் எங்கு சென்றாலும் பர்தா போட்டே செல்வார்.
அதை தான் விருப்பப்பட்டு போட்டு இருப்பதாகவும், தனக்கு எந்த விதமான வற்புறுத்தலும் இல்லை என்பதை பல மேடைகளில், பல நிகழ்ச்சிகளில் அவர் சொல்லி இருக்கிறார்.
இது வேண்டுமென்று ரஹ் மானை குறை சொல்வதற்காக வைக்கப்படும் குற்றச்சாட்டு. காரணம் என்னவென்றால், ரஹ் மானை நீங்கள் வேறு எந்த வழியிலும் குற்றவாளி கூண்டில் ஏற்றி விட முடியாது. அவர் எல்லா விதத்திலும் மிகச் சரியாக இருப்பவர்." என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்