AR Rahman: ரசிகர்கள் கொண்டாடும் முத்திரை பதித்த இசைப்புயலின் 10 பாடல்கள்!
AR Rahman Birthday, 10 Most Memorable Songs : இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 56-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற ஏ.ஆர். ரஹ்மான் இன்றும் இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் ரவுண்டு கட்டி தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் பணிபுரிந்து வருகிறார்.
சர்வதேச அரங்கில் தனது பெயரை பதித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 56-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்குச் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் முழுக்க ரஹ்மானின் பாடல்கள்தான். அவருடைய ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பகிர்ந்து வருகிறார்கள். ரசிகர்கள் பகிர்ந்துள்ள முத்திரை பதித்த ஏ.ஆர். ரஹ்மானின் சிறந்த பத்து பாடல்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. கேளுங்கள்… கேட்டு, பார்த்து மகிழுங்கள்!
ரோஜா திரைப்படத்தில் தன் முதல் இசை பயணத்தை தொடங்கினார் ஏ.ஆர்.ரஹ்மான்.
மின்சாரக் கனவு, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய திரைப்படங்களுக்கு தேசியவிருதுகள் பெற்று உலகளவில் பிரமிக்க வைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஏ.ஆர்.ரஹ்மானை சிறந்த இசை இயக்குனருக்கான நான்காவது தேசிய திரைப்பட விருதைப் பெறச் செய்தது கன்னத்தில் முத்தமிட்டால்.
ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம் ஜப்பானில் பிரபலமாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் முக்கிய காரணமானது.
இந்தியாவின் 50-வது ஆண்டு சுதந்திர திருநாளையொட்டி ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'வந்தே மாதரம்' இசைத் தொகுப்பு இன்று வரை ஓயவில்லை.
பம்பாய், ஜோடி, காதல் தேசம், அலைபாயுதே, ராவணன் என தமிழ் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படும் ஆல்பம் பாடல்கள் இதோ..
அமீர்கான் நடித்த 'லகான்' படத்தின் மூலம் இந்தி திரையுலகைக் கவர்ந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
டாபிக்ஸ்