Anuradha Sriram: திருமண பொருத்தம் இரண்டு தான் இருந்தது - பாடகி அனுராதா ஸ்ரீராம்
அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீராம் பரசுராம் எப்படி சந்தித்து திருமணம் செய்து கொண்டார்கள் என பேட்டி அளித்து உள்ளனர்.
பாடகி அனுராதா ஸ்ரீராம், மீனாட்சி சுந்தரம் -ரேணுகா தேவி தம்பதியின் மகளாகப் பிறந்தார். இவர் 90 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் பாடியுள்ளார். அனுராதா ஸ்ரீராம், பாடகரான ஸ்ரீராம் பரசுராம் என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு, ஜயந்த் மற்றும் லோகேஷ் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இசை கச்சேரிகளிலும், சினிமா பாடல்கள் பாடுவதிலும் இவர் சிரித்த முகமாக பாடுவார். அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீராம் பரசுராம் எப்படி சந்தித்து திருமணம் செய்து கொண்டார்கள் என பேட்டி அளித்து உள்ளனர்.
அவர்கள் கூறுகையில், “ நாங்கள் இருவரும் அமெரிக்காவில் தான் சந்தித்து கொண்டோம். அங்கு தமிழ் தெரிந்த ஒரு நபர் புதிதாக வருபவர்களை பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஸ்ரீராமை அனுப்பினார்கள் போல.
அப்போதுதெல்லாம் இன்டர்நெட் கிடையது, ஸ்ரீராமை தான் அனுப்ப வேண்டியதிருந்தது. அமெரிக்காவில் இருந்து கடிதம் வந்தது, அதனை என்னுடைய அப்பா படித்து விட்டு ராமரிடம் இருந்தே கடித்தம் வந்துவிட்டது என கூறினார்.
நாங்கள் சந்தித்த மூன்றாவது மாதமே ஒரு கச்சேரி அங்கே நடத்தினோம். ஒருமுறை இவருடைய வீட்டிற்கு நான் சென்றிருந்தேன் அப்போது ஸ்ரீராம், அவருடைய அப்பா, அம்மா, தம்பி, ஸ்ரீராம், எல்லோரும் அமர்ந்து பாட்டு பாடிக்கொண்டிருந்தார்.
அப்போது நான் அங்கே சென்ற போது என்னையும் அமரவைத்து பட்டு பாட சொன்னார்கள். அதுதான் இவருடைய முதல் இம்ப்ரஷன். ஏனெற்றால் ஒரு பெண் பாடல் துறையில் வெற்றியடைய வேண்டும் என்றால் கண்டிப்பாக குடும்பத்துடைய ஒத்துழைய்ப்பு தேவைப்படும். ஆனால் இவர்கள் வீட்டில் இப்படி இருப்பதை பார்த்தவுடன் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அதற்கு பிறகு தான் அவர் மேலே காதல் வர தொடங்கியது. நாங்கள் அமெரிக்காவில் இருக்கும் போது எங்களுடைய குடும்பம் மும்பையில் சந்தித்து நிச்சயதார்த்தம் செய்து விட்டார்கள்.
திருமணம் நடந்து நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். குழந்தை எல்லாம் பிறந்துவிட்டது. அப்போது சரி இவர்கள் சந்தோஷாமாக இருக்கின்றனர். அதனால் எங்களுக்கு இருவருக்கும் ஜாதகம் பார்த்தனர். அப்போது ஜாதகத்தின் படி எங்கள் இருவருக்கும் இடையே உள்ள 10 பொருத்தங்களில் 2 பொருத்தங்கள் தான் சரியாக இருந்தது. நாம் எப்படி இருக்குமோ அப்படி தான் வாழ்க்கை அமையும்” என்றனர்.
டாபிக்ஸ்