Anna Serial: அடேய் ஏண்டா இப்படி பண்ணீங்க..இது கனவா இருக்க கூடாதா? ரசிகர்களை எமோஷனலாக்கிய அண்ணா சீரியல் - காரணம் என்ன?
Anna Serial Update: இது கனவா இருக்க கூடாதா? என ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு அண்ணா சீரியல் எமோஷனல் காட்சிகளுடன் இன்றைய எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. அப்படி பின்னணி காரணம் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இதில் நித்யா ராம், மிர்ச்சி செந்தில் குமார், பூவிலங்கு மோகன், ப்ரீதா சுரேஷ், ரித்திகா தமிழ் செல்வி பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
கொலை செய்யப்படும் சூடாமணி
ரத்னம் திருமணத்தை நோக்கி இந்த சீரியல் கதைக்களம் நகர்ந்து வந்த நிலையில் சௌந்தரபாண்டி சூழ்ச்சியால் மருதப்பன் சண்முகத்தை குத்த வர சூடாமணி குறுக்கே வந்து கத்தி குத்து வாங்கி உயிரை விட்டு விட்டார். இதனால் ஷண்முகம் குடும்பம் மொத்தமும் சோகத்தில் மூழ்கி விட்டது. நான்கு தங்கைகளும் சண்முகமும் சேர்ந்து சூடாமணியின் இறுதி சடங்குகளை செய்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களின் கண்களையும் குளமாக்கியுள்ளது.
ரசிகர்கள் கண்ணீர்
அண்ணா சீரியல் குறித்து வெளியான ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் சூடாமணியை ஏண்டா கொன்னீங்க? என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சண்முகமும் அவன் தங்கைகளும் அழும் காட்சிகளை பார்க்கும் கண்கள் கலங்குவதாக கமெண்ட்டுகளில் கண்ணீர் விட்டு வருகின்றனர்.