Anna Serial: வசமாக சிக்கிய பாண்டியம்மா.. சூடாமணி டைரியால் தெரிய வந்த உண்மை - அண்ணா சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anna Serial: வசமாக சிக்கிய பாண்டியம்மா.. சூடாமணி டைரியால் தெரிய வந்த உண்மை - அண்ணா சீரியல்

Anna Serial: வசமாக சிக்கிய பாண்டியம்மா.. சூடாமணி டைரியால் தெரிய வந்த உண்மை - அண்ணா சீரியல்

Aarthi Balaji HT Tamil
Published Oct 03, 2024 01:08 PM IST

Anna Serial: பாண்டியம்மா கிச்சனுக்குள் போர்வையை போத்தி கொண்டு நுழைய இசக்கி அது பாண்டியம்மா தான் என்பதை கண்டுபிடித்து விடுகிறாள்.

Anna Serial: வசமாக சிக்கிய பாண்டியம்மா.. சூடாமணி டைரியால் தெரிய வந்த உண்மை - அண்ணா சீரியல்
Anna Serial: வசமாக சிக்கிய பாண்டியம்மா.. சூடாமணி டைரியால் தெரிய வந்த உண்மை - அண்ணா சீரியல்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8: 30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாண்டியம்மா இசக்கியை அடிக்க திட்டம் போட்டு சிக்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பாண்டியம்மா கிச்சனுக்குள் போர்வையை போத்தி கொண்டு நுழைய இசக்கி அது பாண்டியம்மா தான் என்பதை கண்டுபிடித்து விடுகிறாள்.

திருடன் என நினைத்த சிவ பாலன்

பின்னாடி வந்த சிவ பாலன் திருடன் என நினைத்துக் கொண்டு முப்பிடாதிக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல முத்துப்பாண்டி ஐயா இல்லாத நேரத்துல உங்க வீட்டுல திருடனா? அவன அப்படியே கண்ணு தெரியாத மாதிரி போர்வையை போட்டு புடிச்சு வையுங்க என சொல்ல சிவபாலன் போர்வையை போத்திக் கொண்டு பாண்டியம்மாவை பிடிக்க செல்கிறான்.

பாண்டியம்மாவை மடக்கி பிடித்து அடித்து உட்கார வைக்கின்றனர். சண்முகம் வீட்டில் கேரளா ஸ்டேஷனில் இருந்து சண்முகம் வீட்டிற்கு வந்தவர்கள் சூடாமணி சம்பாதித்த பணம் உள்ளிட்டவற்றை கொடுத்து விட்டு சூடாமணி எழுதி வைத்த டைரி பண்ற எண் கொடுக்கின்றனர்.

இசக்கிக்கு நாளைக்கு பிறந்தநாள்

அந்த டைரி மூலம் இசக்கிக்கு நாளைக்கு பிறந்தநாள் என்பது தெரிய வருகிறது. பிறகு சௌந்தரபாண்டி வீட்டுக்கு வந்த சண்முகம் நாளைக்கு உனக்கு பிறந்தநாள் மாப்பிள்ளையை கூட்டிகிட்டு வீட்டுக்கு வா என்று சொல்கின்றான்.

முத்துப்பாண்டி வேலை இருப்பதாக சொல்ல பாக்கியம் போயிட்டு வாடா என்று அவனை சம்மதிக்க வைக்கிறாள். மேலும் கல்யாணமாகி நாளைக்கு முதல் பிறந்தநாள் வருது அவளுக்கு ஏதாவது வாங்கிக் கொடு என்று சொல்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.