Anna Serial: இசக்கியை தப்பாக பேசிய பாண்டியம்மா.. சௌந்தரபாண்டிக்கு வந்த ஆப்பு - அண்ணா சீரியல்-anna serial today episode on october 2 2024 indicates pandiyamma spoke wrong about isaki - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anna Serial: இசக்கியை தப்பாக பேசிய பாண்டியம்மா.. சௌந்தரபாண்டிக்கு வந்த ஆப்பு - அண்ணா சீரியல்

Anna Serial: இசக்கியை தப்பாக பேசிய பாண்டியம்மா.. சௌந்தரபாண்டிக்கு வந்த ஆப்பு - அண்ணா சீரியல்

Aarthi Balaji HT Tamil
Oct 02, 2024 01:56 PM IST

Anna Serial: சௌந்தரபாண்டி காயத்தில் தவிக்க பாக்கியம் மஞ்சள் போட்டு விடுகிறாள். எதுக்கு டி என் மேலே சுடு தண்ணீர் ஊத்தின என்று கேட்க நீங்க எதுக்கு குறுக்க வந்தீங்க என்று கலாய்க்கிறாள்.

Anna Serial: இசக்கியை தப்பாக பேசிய பாண்டியம்மா.. சௌந்தரபாண்டிக்கு வந்த ஆப்பு - அண்ணா சீரியல்
Anna Serial: இசக்கியை தப்பாக பேசிய பாண்டியம்மா.. சௌந்தரபாண்டிக்கு வந்த ஆப்பு - அண்ணா சீரியல்

அதாவது பாக்கியம் மற்றும் வைகுண்டம் ஆகியோர் சனியனை மடக்கி பிடித்து வைத்திருக்க அவன் நான் பிச்சைக்காரன் தான் என்று சொல்லி எஸ்கேப் ஆக பார்க்கிறான். பாக்கியம் என் மருமகளையா கடத்த பார்த்த என்று உள்ளே சென்று சூடு தண்ணீரை கொண்டு வந்து சனியன் மீது ஊற்ற அவன் நகர்ந்து கொள்ள பின்னாடி வந்து நின்ற சௌந்தரபாண்டி மீது சூடு தண்ணீர் கொட்டி விடுகிறது.

காயத்தில் தவிக்கும் சௌந்தரபாண்டி

அதன் பிறகு சௌந்தரபாண்டி காயத்தில் தவிக்க பாக்கியம் மஞ்சள் போட்டு விடுகிறாள். எதுக்கு டி என் மேலே சுடு தண்ணீர் ஊத்தின என்று கேட்க நீங்க எதுக்கு குறுக்க வந்தீங்க என்று கலாய்க்கிறாள். பிறகு சௌந்தரபாண்டிக்கு பாக்கியம் சாப்பாடு பரிமாற இசக்கி சிவ பாலனுக்கு சாப்பாடு பரிமாறுகிறாள்.

இதை பார்த்த பாண்டியம்மா என்னடி சிவபாலனுக்கு நீ பொண்டாட்டி மாதிரி நடந்துக்குற என்று பேச இசக்கி மற்றும் சிவபாலன் என இருவரும் பாண்டியம்மாவிடம் கோபப்படுகிறாள். இதை தொடர்ந்து இசக்கி சோகமாக அமர்ந்திருக்க பாக்கியம் அவளை சமாதானம் செய்கிறாள்.

சாப்பிடாமல் இருந்த இசக்கி

சாப்பிடாமல் உட்கார்ந்திருந்த இசக்கி யாரோ பேசுனதுக்கு எதுக்கு நான் சாப்பிடாமல் இருக்கனும் என்று சாப்பிட போக பாண்டியம்மா தன்னை அவனமானப்படுத்திய இசக்கியை அடிக்க போர்வையை போத்தி கொண்டு கிச்சனுக்குள் நுழைகிறாள்.

சிவ பாலன் திருடன் என நினைத்து பாண்டியம்மாவை போட்டு அடி வெளுத்து எடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.