Anjali: சுடுகாட்டில் வெளியிடப்பட இருக்கும் அஞ்சலி படத்தின் டீஸர்
இதுவரை யாரும் செய்திராத முயற்சியாக அஞ்சலி நடித்திருக்கும் புதிய பேய் படத்தின் டீஸரை சுடுகாட்டில் வைத்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் கதாநாயகியாக இருந்து வருகிறார் நடிகை அஞ்சலி. கடைசியாக இவரது நடிப்பில் நேரடி தமிழ் படமாக நாடோடிகள் 2 படம் 2020இல் வெளியானது.
இதன் பின்னர் பாவ கதைகள் என்ற நெட்பிளிக்ஸ் வெப் சீரிஸில் நடித்தார். தற்போது ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இடைப்பட்ட காலத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்த அஞ்சலி, வெப்சீரிஸிலும் நடித்தார். இதையடுத்து தெலுங்கில் இவரது நடிப்பில் கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி என்ற பேய் படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், படத்தின் டீஸரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி இதுவரை யாரும் செய்திராத முயற்சியாக படத்தின் டீஸரை சுடுகாட்டில் வைத்து வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
பிப்ரவரி 24ஆம் தேதி ஹைதராபாத்திலுள்ள பேகம்பேட் பகுதி சுடுகாட்டில் வைத்து டீஸரை வெளியிடவுள்ளார்களாம். 2014ஆம் ஆண்டில் வெளியான காமெடி கலந்த பேய் படமான கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகமாக கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி படம் உருவாகியுள்ளது.
இந்த படம் மூலம் மலையாள சினிமா நடிகர் ராகுல் மாதவ் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். படத்தில் சீனிவாஸ் ரெட்டி, சுனில், அலி, சத்யம் ராஜேஷ், ரவிஷங்கர் உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்