Anjali 50th Movie: அஞ்சலியின் 50வது படம் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய்சேதுபதி
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதையில் புதுமுகங்களுடன் இணைந்து நடிகை அஞ்சலி கதையின் நாயகியாக நடிக்கிறார். இது அவரது 50வது படமாக உருவாகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இதையடுத்து இவர் 50வது படத்தில் கமிட்டாகியுள்ளார்.
அஞ்சலி 50 என அழைத்து வரப்பட்ட அந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃப்ரஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர்கள் வெங்கட் பிரபு, மித்ரன் ஜவஹர் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி அஞ்சலி கதையின் நாயகியாக நடிக்கும் இந்த படத்துக்கு ஈகை என தலைப்பு வைத்துள்ளனர். அசோக் வேலாயுதம் என்பவர் படத்தை இயக்குகிறார். க்ரீன் அம்யூஸ்மெண்ட் புரொடக்ஷன் மற்றும் டி3 புரொடக்ஷன் இணைந்து படத்தை தயாரிக்கிறது.
ஒன்றுமே செய்யாமல் அநியாத்தை நிகழ்த்தலாம் என்ற அர்த்தத்தில் படத்தின் கேப்ஷன் இடம்பிடித்துள்ளது. ஈகை படத்தில் காஷ்யப் பர்பையா, புகழ், அபி நட்சத்திரா, உள்பட பலரும் நடிக்கிறார்கள், தரண் குமார் இசையமைக்கிறார். ஆக்ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
முன்னணி கதாநாயகிகளான நயன்தாரா, சமந்தா, த்ரிஷா ஆகியோரை தொடர்ந்து முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையில் நடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து தற்போது அஞ்சலியும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்