Anant, Radhika: பிரான்ஸில் அபார்ட்மெண்ட்.. தனியார் ஜெட்.. ஆனந்த்-ராதிகா திருமண பரிசுகள் மட்டும் இத்தனை கோடியா?
Anant, Radhika: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஜோடிக்கு பாலிவுட் பிரபலங்கள் விலை உயர்ந்த பரிசை வழங்கி உள்ளனர் என்ற செய்தி தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது.

தனியார் ஜெட்.. ஆனந்த்-ராதிகா திருமண பரிசுகள் மட்டும் இத்தனை கோடியா?
தற்போது சமூக வலைதளங்களில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழா குறித்து அனைவரும் பேசி வருகின்றனர்.
இவர்களது திருமணம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 5000 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் இவர்களது திருமணம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பிரபல சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் அனைவரும் திருமணத்திற்கு வந்து புதுமணத் தம்பதிகளை ஆசிர்வதித்தனர்.
மேலும் திருமணத்திற்காக முகேஷ் அம்பானி ரூ. 5 ஆயிரம் கோடி பல்வேறு வழிகளில் செலவு செய்து உள்ளார். அவர்களுக்கு இது மிகக் குறைந்த பட்ஜெட். ரூ. 5 ஆயிரம் கோடி என்பது இவர்களுக்குக் கணக்கு அல்ல. 5 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக வேறு சிலர் கூறுகின்றனர்.