Anand Vaidyanathan: ‘ஆசாமியா பார்க்குறாங்க’ - சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்?-அனந்த் வைத்தியநாதன்
என்னுடன் இருந்தாலே நாம் நிகழ்ச்சிக்குள் சென்றுவிடலாம் என்று அவர்கள் நினைத்து விட்டார்கள்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அறிமுகமே தேவையில்லை. அதில் பாடும் பாடகர்களின் குரலை மேம்படுத்தி அவர்களை திறம்பட பாட வைத்தவர் அனந்த் வைத்தியநாதன். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு நன்கு பரிட்சியமான இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார். அதற்கான காரணம் என்பதை அவர் தற்போது மனம் திறந்து பேசியிருக்கிறார்.
“நான் கண்டிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்திருக்க வேண்டும். கடந்த 2015 ஆம் ஆண்டு நான் என்னுடைய அகாடமியை ஆரம்பித்தேன். அதில் எனக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்றம் நிகழ்ந்தது. அங்கு வந்தவர்கள் என்னை ஒரு குரல் பயிற்சியாளராக பார்க்கவில்லை; அவர்களை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உள் நுழைய வைக்கும் ஒரு ஆசாமியாக பார்த்தார்கள்.
என்னுடன் இருந்தாலே நாம் நிகழ்ச்சிக்குள் சென்றுவிடலாம் என்று அவர்கள் நினைத்து விட்டார்கள். இதனால் அவர்கள் நிகழ்ச்சிக்குள் செல்வதை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னிடம் உள்ள அந்த சப்ஜெக்ட்டை கற்றுக் கொள்வதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. எனக்கு மிகவும் கஷ்டமாக ஆகிவிட்டது. சில பேருக்கு பாட்டே வராது; ஆனால் என்னிடம் வந்து நான் ஒரு பின்னணி பாடகர் ஆக மாறிவிட முடியுமா என்று கேட்பார்கள்.
டி.ஆர்.பி பற்றி?
யார் அங்கு உட்கார்ந்து வார வாரம் நிர்வாகத்திடம் திட்டு வாங்குகிறார்களோ அவர்கள் தான் இதற்கு பதில் சொல்ல முடியும். டிஆர்பி கிடைக்கவில்லை என்றால் அடுத்த வார மீட்டிங்கில் நம்மை ஒரு வழி செய்து விடுவார்கள்; அதனால் ஏதாவது ஒரு கான்செப்டில் நமக்கு வரவேண்டிய ரிசல்ட் வந்துவிட்டால் அதை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நாம் செல்ல வேண்டும். வெளியே இருந்து விமர்சனம் செய்வது மிகவும் எளிதான விஷயம்
டாபிக்ஸ்