தொடரும் கிசுகிசு.. கதையை முடித்துவிட்ட சூப்பர் ஸ்டார்.. கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க..
நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்வதாக வதந்திகள் பரவிய நிலையில், அவற்றை பொய்யென நிரூபிக்கும் வண்ணம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பேசியுள்ளார்.

தொடரும் கிசுகிசு.. கதையை முடித்துவிட்ட சூப்பர் ஸ்டார்.. கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க..
உலக அழகி பட்டம் வென்று இந்தியா முழுவதும் உள்ள மக்களின் மனதில் தனது பெயரை பச்சைக் குத்தி வைத்துள்ளவர் ஐஸ்வர்யா ராய். இவர், உலக அழகி பட்டம் வென்ற பின், தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர்களான மு.கருணாநிதி, எம்ஜிஆர் குறித்து தமிழில் வெளியான இருவர் திரைப்படத்தில் நடத்ததின் மூலம் நடிகையாகவும் தனது கெரியரைத் தொடங்கினார்.
அவர் தமிழ் மொழியைக் காட்டிலும் இந்தியில் அதிக படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி பாலிவுட் மட்டுமல்ல இந்திய சினிமாவில் மிகவும் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகையாக மாறினார். அவரிடம் புகழ் உள்ள அளவு, அவரை சுற்றிய சர்ச்சைகளும் அதிகம்.
பரவும் வதந்தி
சினிமா துறையில் பெண் ஒருவர் சாதித்தாலே அவரைச் சுற்றி பல வதந்திகள் பரவும் நிலையில், புகழின் உச்சத்தில் இருந்தால் அவை இன்னும் கூடுதலாகத் தானே இருக்கும்.