Amaravathi: அஜித் பிறந்தநாளில் ரீ-ரிலீஸாகும் அமராவதி
நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அமராவதி படம் ரீ-ரிலீஸ் ஆகிறது.
1993 ஆம் ஆண்டு செல்வா இயக்கத்தில் வெளியான திரைப்படம், அமராவதி. நடிகர் அஜித் இந்த படம் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை சோழா கிரியேஷன்ஸ் சார்பில், சோழா பொன்னுரங்கம் தயாரித்து இருந்தார். அஜீத் நடித்த இந்த காதல் காவியத்தில் அவருக்கு ஜோடியாக சங்கவி நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் அஜித் வரும் மே மாதம் முதல் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரின் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மேலும் அவரின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் விதமாக, அஜீத் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவரின் முதல் படமான அமராவதி படம் ரீ-ரிலீஸ் ஆகிறது.
தற்போது உள்ள நவீன காலத்திற்கு ஏற்றார் போல் டிஜிட்டலில் வெளியிடுகிறோம் என தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் அறிவித்து இருக்கிறார்.
அதில், "பிரசாத் ஸ்டுடியோவில் இரவு பகலாக நவீனத் தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் ஆக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போதைய இசை வடிவில், புதிய பின்னணி இசை அமைக்கப்பட்டு வருகிறது" என்றார். இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, அஜித் தந்தை உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கிற்கு அமராவதி பட தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் சென்று இருந்தார். அவரை பார்த்ததும் நன்றி மறவாமல் அஜித் இறங்கி சென்று நன்றி தெரிவித்தார். இதைப் பார்த்திபன் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டு இருந்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்