30வது நாளை நெருங்கும் அமரன்.. கங்குவா பட்ஜெட்டை கைப்பற்றுமா அமரன்? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் அதன் 29வது நாளை பூர்த்தி செய்துள்ளது.

30வது நாளை நெருங்கும் அமரன்.. கங்குவா பட்ஜெட்டை கைப்பற்றுமா அமரன்? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 நாட்கள் நிறைவடைகிறது. கடந்த 29 நாட்களிலும் வெற்றிகரமாக இந்தப் படம் திரையரங்கில் மக்களின் ஆதரவைப் பெற்று 320 கோடிக்கும் மேல் வசூலைக் கடந்து சாதித்துள்ளது. இதனால், அமரன் படம் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவின் அடுத்த ஆக்ஷன் ஹீரோவாக மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமரன் திரைப்படத்திற்கு வார இறுதி நாட்களில் தியேட்டருக்கு வருவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
உணர்ச்சிகளை கொட்டித் தீர்த்த நடிகர்கள்
அமரன் திரைப்படம் வெளியான சமயத்தில், மக்கள் அனைவரும் சிவகார்த்திகேயனின் நடிப்பையும், சாய் பல்லவியின் நடிப்பையும் புகழ்ந்து தள்ளினர். குறிப்பாக சாய் பல்லவி தன் முகத்தில் காட்டிய உணர்ச்சிகள் மூலம் அவர் அந்த கதாப்பாத்திரமாகவே மாறி இருக்கிறார் என பலரும் கூறி வந்தனர்.