Alya Manasa: விபத்தில் சிக்கிய ஆல்யா மானசா… பதறும் ரசிகர்கள்
நடிகை ஆல்யா மானசா தனக்கு விபத்து ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ' ராஜா ராணி ' சீரியல் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் நடித்த நாயகன் சஞ்சீவும், நாயகி ஆலியா மானசாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்ததால் சிறிய இடைவெளி எடுத்து விட்டு ஆலியா மானசா தனது உடல் எடையை அசத்தலாகக் குறைத்து மீண்டும் சீரியல் நடிக்க தொடங்கி அசத்தி வருகிறார். ' ராஜா ராணி ’ இரண்டாம் பகுதியில் தற்போது இவர் நாயகியாக நடித்துவந்தார்.
இதனையடுத்து இரண்டாவது குழந்தை பிறந்த காரணத்தினால் அவர் ஆறு மாதம் ப்ரேக் எடுத்தார். குழந்தை பெற்ற பின் உடல் எடை கூடியிருந்த ஆல்யா மானசா தீவிர உடல் பயிற்சி மற்றும் டயட்டுக்கு பின்னர் கணிசமாக தன்னுடைய உடல் எடையை குறைத்து உள்ளா.
மேலும் தற்போது சன் டிவியில் நடிகர் ரிஷிக்கு ஜோடியாக, 'இனியா' என்ற சீரியலில் நடித்து வருகிறார். ஆணாதிக்கம் கொண்ட ஒருவர், சுதந்திரமாக முடிவெடுக்க கூடிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அந்த பெண்ணையும் அடக்கி ஆள நினைக்கிறார்.
இதனை எப்படி இனியா சமாளிப்பார் என்பதை, மையமாக கொண்டு இந்த சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த ஆல்யா மானஸாவிற்கு, யாரும் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. காலில் அடிபட்டு பெரிய கட்டோடு மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ வெளியிட்டு மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், “நான் எதிர்பாக்காத ஒன்று என்னுடைய வாழ்க்கையில் நடந்துள்ளது. என்னுடைய கால் பிராக்சர் ஆகி உள்ளன. எனவே தன்னுடைய நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் எனக்காக வேண்டிக் கொள்ளும்” படி கூறியுள்ளார்.
அடுத்த பதிவில், "என்னால் நடக்க முடியவில்லை. ஆனால் நான் வினாடிக்கு வினாடி நன்றாக வருகிறேன். இதுக்கு உங்கள் அனைவரின் பிரார்த்தனை தான் காரணம். இந்த விபத்தில் கடவுளே என் கணவர் என்னை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை எனக்கு புரிய வைத்தது.
அவர் எப்போதும் என்னை மிகவும் நேசிக்கிறார் என்று எனக்குத் தெரியும், ஆனால் இப்போது நான் இந்த வழியில் செல்வதை அவர் பார்க்க முடியவில்லை. இந்த உலகத்தில் மிகவும் அதிர்வதிக்கப்பட்ட பெண் நான் தான். நான் உன்னை நேசிக்கிறேன் பாப்பு குட்டி” எனக் குறிப்பிட்டு உள்ளார். ஆல்யா மானசாவின் பதிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
டாபிக்ஸ்