தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Allu Arjun Pens Down A Heartfelt Note For Wife Sneha On Their 13th Anniversary

Allu Arjun :'ஹேப்பி ஆனிவர்சரி க்யூட்டி'.. திருமண நாளில் மனைவிக்காக அல்லு அர்ஜுன் இன்ஸ்டாவில் போட்ட பதிவு.. இதோ பாருங்க!

Divya Sekar HT Tamil
Mar 06, 2024 11:22 AM IST

நடிகர் அல்லு அர்ஜுன் தனது 13ஆவது ஆண்டு திருமண நாளில் மனைவி சினேகாவுக்காக இதயப்பூர்வமான தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜுன் மனைவி சினேகா
நடிகர் அல்லு அர்ஜுன் மனைவி சினேகா

ட்ரெண்டிங் செய்திகள்

அதன் பின்னர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த கங்கோத்ரி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநர் கே.ராகவேந்திராவின் நூறாவது திரைப்படம் தான் அந்த கங்கோத்ரி திரைப்படம்.

தெலுங்கு மொழியில் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து நடிகர் அல்லு அர்ஜுன் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். ஒரு சில படங்களின் மூலம் மற்ற மொழி ரசிகர்களை தன்வசப்படுத்திய அல்லு அர்ஜுன், புஷ்பா திரைப்படம் மூலம் மற்ற மொழி ரசிகர்களையும் தனக்கானவர்களாக மாற்றிக் கொண்டார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி ஸ்டாராகவும், ஸ்டைலிஷ் ஸ்டாராகவும் திகழ்பவர் அல்லு அர்ஜூன். இவருக்கு தமிழ்நாடு, கேரள மாநிலத்திலும் ரசிகர்கள் கூட்டம் அதிகமுண்டு. கங்கோத்ரி படத்தின் மூலம், தெலுங்கு சினிமாவில் இவர் அறிமுகம் ஆனாலும், 2004ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஆர்யா, 2009ஆம் ஆண்டு வெளியான ஆர்யா 2, தெலுங்கினைத் தாண்டி, மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றது.

இந்த இருபடங்கள் டப்பிங் படங்களாக இருந்தாலும், இவரது நடன அசைவுகள் கேரளாவில் தனக்கென ஒரு பெரிய மார்க்கெட்டை அல்லு அர்ஜூனுக்கு உருவாக்கிக்கொடுத்தது. அது அவரது புஷ்பா படத்தின் ரிலீஸின்போது மிகப்பெரிய பிளஸ் ஆக மாறியது.

தமிழில் ஆல்ரெடி புஷ்பா படத்தின் பாடல்கள் ஹிட் ஆகிய நிலையில், படமும் சொல்லிக்கொள்ளும்படி ஹிட்டானது. மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்நிலையில், புஷ்பா 2 படத்தினை உருவாக்கும் பணிகளை தயாரிப்புக்குழு முன்னெடுத்தது. அதிலும் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடித்து வருகிறார்.

சிறந்த நடிகருக்கான விருதை புஷ்பா படத்தில் நடித்ததற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வென்றார். சிறந்த நடிகருக்கான விருது பிரிவில் தேசிய விருது வென்ற முதல் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஆவார். தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

நண்பர்கள் மூலம் ஸ்நேகாவை முதன்முதலில் சந்தித்த அல்லு அர்ஜூன், பார்த்த நொடியே காதலில் விழுந்தார். தொடர்ந்து 2011ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் அல்லு அர்ஜூன் - ஸ்நேகா இருவரும் திருமணம் செய்து கொண்டார். கடந்த 13 ஆண்டுகளாக இந்தத் தம்பதி டோலிவுட்டின் காதல் பறவைகளாக வலம் வந்து ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஆர்ஹா எனும் பெண் குழந்தையும், அயான் எனும் ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் இன்று தனது 13 வது திருமண நாளைக் கொண்டாடுகிறார். மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஸ்டோரியில்,"ஹேப்பி ஆனிவர்சரி க்யூட்டி. இன்றோடு 13 வருடங்கள் ஆகின்றன. உன் துணையோடு நான் செழித்து வளர்ந்தேன். உனது அமைதி எனக்கு ஆற்றலை கொடுக்கிறது.இறுதி நேரம் வரை இன்னும் பல" என பதிவிட்டுள்ளார்.

அல்லு அர்ஜூன்
அல்லு அர்ஜூன்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்