Ajith: அஜித்தை 'தல' என அழைக்கவைத்த படம் ரீ- ரிலீஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith: அஜித்தை 'தல' என அழைக்கவைத்த படம் ரீ- ரிலீஸ்

Ajith: அஜித்தை 'தல' என அழைக்கவைத்த படம் ரீ- ரிலீஸ்

Marimuthu M HT Tamil
Jan 16, 2024 01:58 PM IST

- அஜித் நடித்த தீனா திரைப்படம் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அஜித் நடித்த தீனா திரைப்படம்
அஜித் நடித்த தீனா திரைப்படம்

நடிகர் அஜித் குமார் நடித்து, தீனா திரைப்படம் வெளியாகி 23ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. இந்நிலையில் அதை டிவிட்டரில் அஜித் ரசிகர்கள் நினைவுகூர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

ஆம். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் முதல் படமாக ஜனவரி 14ஆம் தேதி பொங்கலை ஒட்டி, 2001ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. இப்படத்தில் அஜித் குமார், மலையாள நடிகர் சுரேஷ் கோபி, லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். இப்படத்துக்குண்டான பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜா செய்திருந்தார். பாடல்களும் செம ஹிட்டானது. இப்படத்துக்குண்டான ஆக்‌ஷன்மோட் ஒளிப்பதிவினை அரவிந்த் கமலநாதன் மேற்கொண்டிருந்தார். இப்படத்தில் தான் முதன்முதலாக, ‘தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது’ என்னும் வசனத்தை ஸ்டண்ட் மேன் மகாநதி ஷங்கர் பேசியிருப்பார். அன்று முதல் பல ஆண்டுகளாக, தல என ரசிகர்களால் செல்லப்பெயருடன் அழைக்கப்பட்டார், அஜித். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பின், அந்தப் பெயரை சொல்லி அன்புக்கட்டளையிட்டார், அஜித். மேலும் தன்னை அஜித் என்றும்; ஏ.கே. என்றும் அழைத்தால் போதும் என்றார்.

இந்நிலையில் சமீபத்தில் தீனா படம் குறித்து நிறையப் பேர் பேசி வரும்நிலையில் இப்படத்தை டிஜிட்டல் மெருகேற்றல் செய்து, பிப்ரவரி மாதம் ரீ- ரிலீஸ் செய்வதாக தயாரிப்பு நிறுவனமான விஜயம் சினி கம்பைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படத்துக்குண்டான திரையரங்க ரிலீஸை, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீ லாவண்யா ஃபிலிம்ஸ் மேற்கொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.