Ajith: அவ்வளவு பெரிய தவறா? வீடியோ எடுத்த ரசிகர் போனை பிடுங்கிய அஜித்
நடிகர் அஜித் தன்னை வீடியோ எடுத்த ரசிகரின் போனை பிடுங்கி எச்சரித்தார்.

அஜித்
தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல ரசிகர்களை கொண்டவர் நடிகர் அஜித். அஜித்தின் வரவிருக்கும் படங்களைப் பார்க்க ஒவ்வொரு ரசிகனும் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் அஜித் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைக்கும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அஜித் அனுமதியின்றி தன்னை வீடியோ எடுத்த ரசிகரின் போனை பிடுங்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. போனை வாங்கிய பிறகு எப்படி டெலிட் செய்யப்படுகிறது என்பதை வீடியோ காட்டுகிறது. அஜீத் ரசிகருக்கு எச்சரிக்கையும் கொடுத்துள்ளார். துபாய் விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
