தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith Kumar: ஏகே 63 படத்தை இயக்குவது ஆதிக் ரவிச்சந்திரனா? - உண்மை என்ன? - உறுதிபடுத்தப்பட்ட தகவல் உள்ளே!

Ajith Kumar: ஏகே 63 படத்தை இயக்குவது ஆதிக் ரவிச்சந்திரனா? - உண்மை என்ன? - உறுதிபடுத்தப்பட்ட தகவல் உள்ளே!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 21, 2024 03:11 PM IST

இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கும் நிலையில், நடிகர் அர்ஜூன், பிக்பாஸ் ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Ajith will team up with Mark Anthony director for his next
Ajith will team up with Mark Anthony director for his next

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் தரப்பில் விசாரித்த போது, “ ஆமாம், மார்க் ஆண்டனி இயக்குநர் ஏகே 63 படத்தில் இயக்குநராக கமிட் செய்யப்பட்டு இருக்கிறார்.” என்று கூறினார்கள். 

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் 2015 ஆம் ஆண்டு த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

2019 ஆம் ஆண்டில், ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். தொடர்ந்து சில படங்களை இயக்கினார். ஆனால் அந்த படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.  இந்த நிலையில், விஷால், எஸ்.ஜே. சூர்யா நடித்த மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் தூக்கப்பட்டார். அதனை தொடர்ந்துதான் அதில் மகிழ் திருமேனி இயக்குநராக கமிட் செய்யப்பட்டார். அந்த படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டது.

படம் தொடர்பான போஸ்டர் மட்டுமே வெளியான நிலையில், அதன் பின்னர் அந்த படம் குறித்தான எந்த அப்டேட்டுமே வெளியாக வில்லை. இதனால் சோகத்தில் இருந்த அவரது ரசிகர்களுக்கு, தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று கொண்டிருக்கும் அந்த ஷூட்டிங் தொடர்பான போட்டோக்கள் மட்டுமே ஆசுவாசத்தை தந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கும் நிலையில், நடிகர் அர்ஜூன், பிக்பாஸ் ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.