தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith Kumar: நட்புனா என்னனு தெரியுமாடா?… ஆரவிற்கு அஜித் கொடுத்த பைக் பரிசு.. விலை எவ்வளவு தெரியுமா?

Ajith Kumar: நட்புனா என்னனு தெரியுமாடா?… ஆரவிற்கு அஜித் கொடுத்த பைக் பரிசு.. விலை எவ்வளவு தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Apr 09, 2024 07:54 PM IST

நடிகர் அஜித்தும், ஆரவும் நண்பர்கள் ஆகினர். இதனையடுத்து ஆரவ், நடிகர் அஜித் மேற்கொள்ளும் பயணத்திலும் பங்கேற்றார்.

அஜித் கொடுத்த பரிசு!
அஜித் கொடுத்த பரிசு!

ட்ரெண்டிங் செய்திகள்

விடாமுயற்சி திரைப்படத்தில் ஒன்றாக நடித்து வருவதின் மூலமாக நடிகர் அஜித்தும், ஆரவும் நண்பர்கள் ஆகினர். இதனையடுத்து ஆரவ், நடிகர் அஜித் மேற்கொள்ளும் பைக் பயணத்திலும் பங்கேற்றார். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இந்த நிலையில் நடிகர் அஜித், ஆரவிற்கு 35 லட்ச மதிப்பிலான பைக் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார். 

முன்னதாக, நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘துணிவு’. இந்தத்திரைப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கினார். பொங்கல் பரிசாக வெளியான இந்தத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

முறிந்த கூட்டணி: 

இந்தப்படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும், விக்னேஷ் சிவனிற்கும் இடையே நடந்த படைப்பு தொடர்பான முரண்பாடுகள் விக்னேஷ் சிவனை அந்தப்படத்தில் இருந்து புறந்தள்ளியது. இந்த நிலையில்தான் இயக்குநர் மகிழ் திருமேனி அஜித்தின் 62 -ல் கமிட் செய்யப்பட்டார். இந்தப்படத்திற்கு விடா முயற்சி என பெயர் வைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதன் பின்னர் அந்தப்படம் குறித்த எந்தத்தகவலும் வெளியாக வில்லை. இதனால் அவரது ரசிகர்கள் தொடர்ந்து அந்தப்படத்தின் அப்டேட் குறித்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆனால் படம் குறித்த எந்த வித தகவலும் வெளியாக காரணத்தால் அந்தப்படம் கைவிடப்படுவதாக திரைவட்டாரத்தில் தகவல் பரவியது. 

விடாமுயற்சி படம் கைவிடப்படவில்லை

இந்த நிலையில் இது குறித்து அந்தப்படத்தின் தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் விடாமுயற்சி படம் கைவிடப்படவில்லை என்று விளக்கம் அளித்தார். இதனையடுத்து படக்குழு அஜர்பைஜான் நாட்டிற்கு  படப்பிடிப்பிற்கு சென்றது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின. அண்மையில் ஆரவும், அஜித்தும் சென்ற கார் விபத்திற்கு உள்ளானது. அது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. 

சுரேஷ் சந்திரா விளக்கம்: 

இது குறித்து விளக்கம் அளித்த அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா, “ அஜித் சார் ஒரு காட்சியில் காரை வேகமாக ஓட்டும்போது, கார் ஸ்கிட் ஆகி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இதைப் பார்த்து பதறிய படக்குழுவும் காரை நோக்கி ஓடினார்கள். அந்தக் கார் ஹம்மர் என்பதால் பெரிதாக எந்தப் பாதிப்பு இல்லை. 

மனது சங்கடமாக மாறுகிறது

இப்போது இந்த வீடியோவை வெளியிட காரணம் உள்ளது. ஏனென்றால் நடிகர்கள் ரிஸ்க் எடுத்து நடிக்கிறார்கள். ஆனால் பலரும் படம் நின்று போனது  என்று கூறும்போது. அதில் உழைத்த அத்தனை பேருக்கும் மனது சங்கடமாக மாறுகிறது. அதனால் ரசிகர்களுக்கும் இந்த வீடியோ ஒரு மனத் தெம்பை அளிக்கும்” என்று குறிப்பிட்டு இருந்தார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்