வலிமையானவர் …. யாரை சொல்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வலிமையானவர் …. யாரை சொல்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

வலிமையானவர் …. யாரை சொல்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Aarthi V HT Tamil
Apr 08, 2022 01:33 PM IST

நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தீவிரமாக உடற் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியீட்டு உள்ளார்.

<p>ஐஸ்வர்யா ரஜினிகாந்த்</p>
<p>ஐஸ்வர்யா ரஜினிகாந்த்</p>

இவருக்கும் , நடிகர் தனுஷுக்கு கடந்த சில ஆண்டுகளாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக தாங்கள் பிரிவதாக இருவரும் தெரிவித்து இருந்தனர் . இந்த அறிவிப்பு வெளியிட்ட பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வேலைகளில் மிகவும் பிஸியாக மாறி இருக்கிறார் .  இவர் இயக்கிய ' முசாபிர் ' இசை ஆல்பம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .

இதனையடுத்து ராகவா லாரன்ஸுடன் , ஐஸ்வர்யா புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் . பின்னர் நேரடியாக பாலிவுட்டில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராகக் கால் பதிக்க உள்ளார் . இவர் இயக்கிய ' முசாபிர் ' இசை ஆல்பம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . 

இதனையடுத்து ராகவா லாரன்ஸுடன் , ஐஸ்வர்யா புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். பின்னர் நேரடியாக பாலிவுட்டில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராகக் கால் பதிக்க உள்ளார் . தொடர்ந்து பிஸியான வேலைகளில் இறங்கி இருக்கிறார். தான் என்ன புத்தகம் படிக்கிறேன் , எங்கு சென்று வருகிறேன் என அனைத்தையும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் .

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் , தற்போது தீவிரமாக உடற் பயிற்சியில் இறங்கி இருக்கிறார் .

அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடற்பயிற்சி செய்யும் விடியோ ஒன்றை வெளியீட்டு உள்ளார் . அதில் , "ஆரோக்கியமே உங்களின் மிகப்பெரிய செல்வம் என்பதை மறந்து விட வேண்டாம் . சுத்தமான உணவுகளை சாப்பிடுங்கள்.

நன்றாக நீர் அருந்துங்கள். மெலிந்தவர் , வலிமையானவர் , ஆனால் ஒரு போதும் அர்த்தமற்றவர் அல்ல " எனக் குறிப்பிட்டு உள்ளார் .

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.