Aishwarya Rajinikanth: ‘சங்கி’ -னு பேசுனது பிளானா? .. அப்பா படம் அப்படி ஓட வேண்டிய அவசியமே’ - கொந்தளித்த ஐஸ்வர்யா!
நான் அப்படி பேசிய போது அப்பா ஷாக்காகி விட்டார். இதற்கிடையே அப்பாவை ஏர்போர்ட்டில் நிறுத்திய பத்திரிகையாளர் ஒருவர், என்ன பிளான் செய்துதானே நீங்கள் அப்படி பேசினீர்கள்? என்று கேட்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் மூன்றாவது படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்தப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இன்று சென்னையில் இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், "ஆடியோ வெளியீட்டு விழாவில், (ரஜினியை சங்கி என்று அழைப்பதை கண்டித்திருந்தார்). நான் என்ன பேசப்போகிறேன் என்பது அவருக்குத் தெரியாது.
நான் அப்படி பேசிய போது அப்பா ஷாக்காகி விட்டார். இதற்கிடையே அப்பாவை ஏர்போர்ட்டில் நிறுத்திய பத்திரிகையாளர் ஒருவர், என்ன பிளான் செய்துதானே நீங்கள் அப்படி பேசினீர்கள்? என்று கேட்டார்.
என் மூலமாக திட்டமிட்டு பேசியோ அல்லது படத்தில் அரசியல் பேசியோ சூப்பர் ஸ்டார் படம் ஓட வேண்டிய அவசியம் கிடையாது. சொந்த கருத்தை பேசும் உரிமையை அவர் எங்களுக்கு கொடுத்திருக்கிறார்.
படம் மக்களை, மக்களைச்சாந்த ஒரு சிறு அரசியலை பேசுகிறது. குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் அரசியலுடன் தொடர்பு இருக்கிறது. ஒரு விளையாட்டு வினையாக முடிந்தால் என்ன நடக்கும் என்பதுதான் இந்தப்படத்தின் கதை.
ஏ.ஆர். ரஹ்மான் அமெரிக்கா சென்று இருக்கிறார். இந்த நிலையில் இன்று காலை அவரை அழைத்து எப்படி படம் ரிலீஸ் நெருங்கும் நேரத்தில், நீங்கள் விட்டு செல்லலாம் திட்டிக்கொண்டிருந்தேன்.
உடனே அவர் எங்கே விட்டுப் போனேன் என்று சொல்லி முழு நேரமும் ஜூமில் இருந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். அந்தளவு பாசமான மனிதர். அந்தளவு அக்கறையாக பார்த்துக்கொண்டிருக்கிறார்.
படத்தின் பின்னணி இசையை படம் ரிலீஸ் ஆன உடன் வெளியிடுவோம். அது நிச்சயம் 90களில் வந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசையை போன்று இருக்கும். அவருக்கு நான் அப்படி சொன்னால் பிடிக்காது. காரணம், அப்படியானால் இப்போது என்னுடைய இசை அப்படி இல்லையா என்று கேட்பார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தப்படம் கம்பேக் படமாக இருக்கும்.” என்று பேசினார்
“
டாபிக்ஸ்