Anirudh Ravichander: “வாடா கண்ணா.. எந்த கார் வேணும்”.. கமல் கொடுக்கல.. கலாநிதி கைவிடல.. - அனிருத்திற்கு அசத்தல் கார்!
ஜெயிலர் திரைப்படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்திற்கும் கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் 10 ம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. திரைப்படம் 25 வது நாளை கடந்தும் தியேட்டருக்கு ஜெயிலர் படத்தை பார்க்க மக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்தத்திரைப்படம் வசூலில் 500 கோடியை கடந்து விட்டதாக அதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. கொட்டும் வசூலால் மனம் குளிர்ந்து போன கலாநிதிமாறன் நடிகர் ரஜினிகாந்திற்கு 1.20 கோடி பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 காரையும், படத்தின் இயக்குநர் நெல்சனுக்கு 1.40 கோடி மதிப்புள்ள ‘Porsche’ காரை பரிசாக வழங்கினார்.
கூடவே இருவருக்கும் லாபத்தில் இருந்து தான் விருப்பப்பட்ட தொகையை காசோலையாகவும் கொடுத்தார். இந்த நிலையில் தன்னுடைய இசை மூலம் படத்தின் வெற்றிக்கும் பெருந்துணையாக அனிருத்திற்கு எதுவும் வழங்கப்படாதது குறித்து சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் கலாநிதிமாறன் அனிருத்திற்கும் காசோலை ஒன்றை வழங்கியது தொடர்பான புகைப்படம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ரஜினி மற்றும் நெல்சனுக்கு வழங்கியது போல அனிருத்திற்கும் காரை வழங்க முடிவு செய்த கலாநிதி மாறன் மூன்று கார்களை வரவழைத்து எந்தக்கார் வேண்டும் என்று கேட்டார். இதனையடுத்து மூன்று கார்களிலும் உட்காந்து பார்த்த அனிருத் porsche காரை எடுத்துக்கொள்வதாக சொல்ல, அதற்கான சாவியை கலாநிதி மாறன் அனிருத்திடம் வழங்கினார்.
டாபிக்ஸ்