மொத்தம் 40 ஷோக்கள்.. ரஹ்மானின் ஆதர்ச பேசிஸ்ட் கணவரை பிரிவதாக அறிவிப்பு! - காரணம் என்ன தெரியுமா மக்களே?
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் பணியாற்றும் பெண் இசைக்கலைஞர் ஒருவர் தன்னுடைய விவாகரத்து முடிவை அறிவித்து இருக்கிறார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியான சாய்ரா பானு நேற்றைய தினம் தன்னுடைய விவாகரத்து முடிவை அறிவித்தார். இந்த செய்தியை ஜீரணித்து முடிப்பதற்குள் இன்னொரு பிரபலம் தன்னுடைய கணவரிடம் பிரிவதாக அறிக்கை வெளியிட்டு குண்டைத் தூக்கிப்போட்டு இருக்கிறது.
ஆம், ஏ.ஆர். ரஹ்மானின் குழுவில் பேசிஸ்ட்டாக பணியாற்றி வரும் மோகினி டே தன்னுடைய கணவரை பிரிவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்தப்பதிவில், கனத்த இதயத்தோடு நானும் மார்க்கும் பிரிந்து விட்டோம் என்ற செய்தியை நான் இங்கே பதிவிடுகிறேன்.
எங்கள் அர்ப்பணிப்பு யாருக்கு?
எங்களது அர்ப்பணிப்பு என்பது முதலில் எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்குத்தான். இந்த முடிவை நாங்கள் இரு மனதாக பேசிதான் எடுத்து இருக்கிறோம். எங்களின் இருவருக்குமே வேறு வேறு விஷயங்கள் தேவைப்படுகிறது. எங்களது விவாகரத்து சிறந்த முறையில் நிகழும். இருப்பினும் நாங்கள் நண்பர்களாக பயணிப்போம்.
நாங்கள் தொடர்ந்து இசை தொடர்பான நிகழ்வுகளில் இணைந்து பணியாற்றுவோம். நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றிவதில் எப்போதுமே பெருமை கொள்கிறோம். அது எந்த நேரத்திலும் நிறுத்தப்படாது. நாங்கள் விரும்பும் பெரிய விஷயம், இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொருவரிடம் நாம் அன்பு காட்ட வேண்டும். நீங்கள் எங்களுக்காக கொடுத்த ஆதரவை உங்களுக்கு ஒவ்வொரு வழியிலும் திருப்பிக்கொடுக்க முயற்சி செய்வோம்.
எங்களது முடிவுக்கு மதிப்பளித்து, இந்த விவகாரத்தை நேர்மறையான முறையில் கொண்டு செல்லவும், எங்களது தனிப்பட்ட உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கவும் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் எங்களை பற்றி எடை போடுவதை எடுத்துக்கொள்ளப்போவதில்லை.” என்று பதிவிட்டு இருக்கிறார். 29 வயதே ஆகும் மோகினி டே கிட்டத்தட்ட 40 நிகழ்ச்சிகளில் ரஹ்மானுடன் ஒன்றாக சேர்ந்து பணியாற்றி இருக்கிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்