தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Aditi Shankar Net Worth Details And Salary Details

Aditi Shankar: கோலிவுட்டின் லக்கி ஹீரோயின்.. ஒரு படத்திற்கு அதிதி ஷங்கர் வாங்கும் சம்பளம் என்ன தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
Mar 22, 2024 12:26 PM IST

கோலிவுட்டில் லக்கி ஹீரோயினாக வலம் வரும் அதிதி ஷங்கரின் நிகர மதிப்பு மற்றும் சம்பள விவரங்களைப் பார்ப்போம் .

அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சினிமாவில் பிஸியான ஹீரோயினாக நடித்து வருபவர், அதிதி ஷங்கர். பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம் .

அதிதி ஷங்கர்

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த இயக்குனர் . இவருக்கு ஐஸ்வர்யா , அதிதி ஷங்கர் என்ற இரு மகள்களும், அர்ஜித் என்ற மகனும் உள்ளனர். சங்கரின் மகள்கள் இருவரும் டாக்டர்களாக படித்தவர்கள். டாக்டராக படித்து முடித்த ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார். ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி, படிப்பை முடித்துவிட்டு ஹீரோயினாக அறிமுகமாகி டாக்டர் தொழில் செய்யாதம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

விருமன் கொடுத்த வெற்றி

2022 ஆம் ஆண்டு முத்தையா இயக்கிய விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி . இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். விருமன் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. அதிதி தனது முதல் படத்திலேயே கிராமத்து நாயகியாக நடித்ததற்காக பாராட்டுகளை பெற்று விருதுகளையும் பெற்றார். அதுமட்டுமின்றி இந்தப் படத்தின் மூலம் பாடகியாகவும் அறிமுகமானார் அதிதி .

விருமன் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஷங்கரின் மகள் அதிதிக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு மாவீரன் திரைப்படம் . மேடன் அஷ்வின் இயக்கிய இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து இருந்தார். கடந்த ஆண்டு வெளியான விருமன் படம் பாக்ஸ் ஆபிஸிலும் 80 கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது. அதிதி ஷங்கர் நடித்த இரண்டு படங்களும் ஹிட் ஆனதால் கோலிவுட்டின் லக்கி ஹீரோயினாக மாறினார் அதிதி ஷங்கர் .

தற்போது அதிதிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவரது அடுத்த படத்தை விஷ்ணு வர்தன் இயக்குகிறார். இன்னும் பெயரிடாத இந்த படத்தில் நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார்.இதுதவிர நடிகர் சூர்யா - சுதா கொங்கரா இணைந்து தயாரிக்கும் புறநானூறு படத்திலும் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க உள்ளார் . அதர்வாவுடன் ஒரு படத்தில் நடிக்கவும் கமிட் ஆகியுள்ளார்.

கோலிவுட்டில் லக்கி ஹீரோயினாக வலம் வரும் அதிதி ஷங்கரின் நிகர மதிப்பு மற்றும் சம்பள விவரங்களைப் பார்ப்போம் . அதன்படி தற்போது ஒரு படத்துக்கு ரூ.35 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார். அடுத்தடுத்த படங்களின் ரிசல்ட்டைப் பொறுத்து சம்பளத்தை லட்சத்தில் இருந்து கோடியாக மாற்றும் முடிவில் இருக்கிறாராம் அதிதி. தற்போதைய நிலவரப்படி இவரது சொத்து மதிப்பு ரூ.80 லட்சம் என கூறப்படுகிறது. அதிதியின் தந்தை சங்கருக்கு ரூ.250 கோடிக்கு மேல் சொத்து உள்ளது

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்