Actress Vinodhini: ஒரே டீசர்ட்தான்.. அந்த டீனேஜில் அப்படி பேசுனாங்க.. புடவை உடுத்தி நடிச்சாலும்’ -விநோதினி-actress vinodhini latest interview about vanna vanna pookkal kannamma kadhal ennum sexy dress - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Vinodhini: ஒரே டீசர்ட்தான்.. அந்த டீனேஜில் அப்படி பேசுனாங்க.. புடவை உடுத்தி நடிச்சாலும்’ -விநோதினி

Actress Vinodhini: ஒரே டீசர்ட்தான்.. அந்த டீனேஜில் அப்படி பேசுனாங்க.. புடவை உடுத்தி நடிச்சாலும்’ -விநோதினி

Kalyani Pandiyan S HT Tamil
Aug 21, 2024 07:00 AM IST

Actress Vinodhini: அந்தப் படத்தில் என்னுடைய ஆடை குறித்தான விமர்சனம் பரவலாக அப்போது பேசப்பட்டது உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், அவர்கள் என்ன ஆடை உடுத்தி நடித்து இருந்தாலும் என்னை விமர்சனம் செய்திருப்பார்கள். - விநோதினி!

Actress Vinodhini: ஒரே டீசர்ட்தான்.. அந்த டீனேஜில் அப்படி பேசுனாங்க.. புடவை உடுத்தி நடிச்சாலும்’ -விநோதினி
Actress Vinodhini: ஒரே டீசர்ட்தான்.. அந்த டீனேஜில் அப்படி பேசுனாங்க.. புடவை உடுத்தி நடிச்சாலும்’ -விநோதினி

புடவைக்கட்டி நடித்தால் கூட விமர்சனம்

இது குறித்து அவர் பேசும் போது, “அந்தப் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் நல்ல அனுபவம். அந்த படத்தை பாலுமகேந்திரா டைரக்ட் செய்ததோடு, அதில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி1னார். அந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. உண்மையில் அந்த படம் எனக்கு கிடைத்ததற்கு, நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.

அந்தப் படத்தில் என்னுடைய ஆடை குறித்தான விமர்சனம் பரவலாக அப்போது பேசப்பட்டது உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், அவர்கள் என்ன ஆடை உடுத்தி நடித்து இருந்தாலும் என்னை விமர்சனம் செய்திருப்பார்கள். இவ்வளவு ஏன் புடவை கட்டி நீங்கள் நடித்தால் கூட, அதையும் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள்.

அந்த டீனேஜில் நான் எப்படி நடித்தேன்?

ஆனால் நான் எதையும் மிகவும் பர்சனலாக எடுத்துக் கொள்வதில்லை. அந்த டீனேஜில் நான் எப்படி நடித்தேன் என்று கேட்கிறீர்கள். அதை அப்படியெல்லாம் இங்கு பார்க்க தேவையில்லை; அது போன்ற கதாபாத்திரங்களையெல்லாம் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பாகவே பாலிவுட்டில் நடித்து விட்டார்கள்.

ஆனால் தமிழ் சினிமாவில் அப்போது வெறும் டீ சர்ட்டை மட்டும் அணிந்து யாரும் நடிக்கவில்லை. ஆனால் ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு நடிகைகள் கபடி காட்சிகளில் நடித்திருக்கிறார்கள். ஆனால் நான் ஒரே ஒரு ஆடையை அணிந்து நடித்த காரணத்தால் பயங்கரமாக பேசப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் அதைவிட குறைவாக ஆடைகளை உடுத்தி நடிகைகள் நடிக்கத்தான் செய்கிறார்கள்.

முன்னதாக, பிரபல பத்திரிகையாளரான பாண்டியன் பிரபல இயக்குநர் பாலு மகேந்திரா குறித்தும் அவருக்கும் ஷோபாவிற்கும் இடையே இருந்த காதல் குறித்தும் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்தார்.

பெண் பித்தர்

இது குறித்து அவர் பேசும் போது, “பாலுமகேந்திரா ஒரு பெண் பித்தர் அவர் அவரது படங்களில் நடிக்கும் கதாநாயகிகளை, அந்த படம் முடிவதற்குள்ளாக, பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அவர்களை திருமணம் செய்து கொள்வார். அந்த வரிசையில் அமைந்தவர்கள் தான் நடிகைகள் ஷோபா, மோனிகா உள்ளிட்ட நடிகைகள்.

அவர் கடைசி காலத்தில் கூட, ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இருந்த 23 வயது பெண்ணை தன்னுடன் வைத்திருந்தார். அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார்கள். அப்போது பாலுமகேந்திராவுக்கு 73 வயது இருக்கும். ஷோபாவும், பாலு மகேந்திராவும் காதலித்து வந்தார்கள். இதில் ஷோபா தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்றால், ஷோபாவை பாலு மகேந்திரா திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி, கடைசி வரை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்ததால்தான்.

ஏமாற்றிய பாலு மகேந்திரா

ஷோபாவின் வீட்டிலும், பாலு மகேந்திரா குறித்து மிகவும் மோசமான கருத்துக்களைச் சொன்னார்கள். அவர் பல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்தவர் என்று குற்றம் சாட்டினார்கள். ஆனால் ஷோபா பாலு மகேந்திரா தன் மீது உயிருக்கு உயிராக இருப்பதாக சொன்னார். பாலுமகேந்திரா ஷோபாவின் காதல், மிக நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை.

நடிகை ஷோபா கடைசி வரை பாலு மகேந்திரா தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் பாலு மகேந்திராவோ அவரது முன்னாள் மனைவி இல்லாமல், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தார். இதை தெரிந்த ஷோபா மனம் துயரம் தாங்காமல்,தற்கொலை செய்து கொண்டார்.

காப்பாறிய எம்.ஜி.ஆர்

அப்போது ஷோபாவின் வீடு கே.கே நகரில் இருந்தது. அப்படி பார்த்தால் அது தொடர்பான வழக்கு கேகே நகர் காவல் நிலையத்தில்தான் பதியப்பட வேண்டும். ஆனால் அந்த வழக்கு பூக்கடை காவல் நிலையத்தில் பதியப்பட்டது. இதற்கு காரணமானவர், அப்போது ஆட்சிக்கட்டிலிருந்து எம்ஜிஆர். ஆம், எம்ஜிஆர் தான் பாலு மகேந்திராவை அந்த கொலை வழக்கிலிருந்து காப்பாற்றினார். இப்போதும் நடிகை சாந்தி வில்லியம்ஸ், பாலு மகேந்திரா குறித்து மிகவும் கோபமாக பேட்டியில் பேசியிருக்கிறார். அந்த கோபம் அவர் பெண்களின் வாழ்க்கையை மோசம் செய்ததின் வெளிப்பாடே” என்று பேசினார்.

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.கள்.” என்று பேசினார்.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.