Urvashi: கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் ஊர்வசி நடித்த 700வது படம் அப்பத்தா!
கலர்ஸ் தமிழ் டிவியில் மூவி ஆப் தி மன்த் வரிசையில் நடிகை ஊர்வசி நடித்திருக்கும் 700வது படமான அப்பத்தா ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
சிறப்பு பங்குதாரர் ‘கோல் வின்னர் - முப்பது வருட நம்பிக்கை’ யுடன் இணைந்து இந்த குடும்ப திரைப்படத்தை கலர்ஸ் டிவி வழங்குகிறது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகையாக ஊர்வசி இருந்து வருகிறார். இவர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அப்பத்தா, உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. நவம்பர் 26ஆம் தேதி வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இந்தப் படம் ஒளிபரப்பப்பட உள்ளது.
மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தை ஜோதி தேஷ்பாண்டே, சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பையஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஜியோ ஸ்டூடியோஸ் வழங்கும் இந்த படம், வைட்-ஆங்கிள் கிரியேஷன்ஸ் பேனரில் தயாராகியுள்ளது. படத்துக்கு இசை - ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை மது அம்பாட் மேற்கொண்டுள்ளார். எடிட்டிங் - எம்.எஸ். ஐயப்பன் நாயர்.
அப்பத்தா என்று ஊராரால் அழைக்கப்படும் கண்ணம்மா (ஊர்வசி) காயிலான் பட்டி கிராமத்தில் தன் வாழ்நாள் முழுவதையும் கழித்து வருகிறார். தன் தொழிலில் தனக்கென ஒரு பெயர் எடுக்க முயன்றாலும் கணவனை இழந்த பிறகு தன் மகனை தனியாக வளர்க்கிறாள்.
வலிமையான மன உறுதியும், அச்சமற்ற குணத்தையும் கொண்ட அவருக்கு நாய்கள் என்றால் பயம். பல ஆண்டுகளுக்கு பிறகு, கண்ணம்மா சென்னையில் குடியேறிய தன் மகனுடன் மீண்டும் இணைய முயற்சி செய்கிறார். மகனின் குடும்பம் விடுமுறைக்கு வெளியூருக்குச் செல்லும்போது, மகன் வளர்த்து வரும் ஜூயஸ் நாயை பார்த்து கொள்ளும் பொறுப்பு கண்ணம்மாவுக்கு வருகிறது.
தொடர்ச்சியான சம்பவங்கள் நடைபெறுவதைத் தொடர்ந்து, நாயும், கண்ணம்மாவும், ஒருவரையொருவர் விலகி இருக்க முயற்சிப்பதில் இருந்து கிட்டத்தட்ட பிரிக்க முடியாதவர்களாக மாறி விடுகிறார்கள். படத்தில் நடிகை ஊர்வசி, நடிகர் அருள்தாஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அமித் பார்கவ், காவேரி ஜா, மேகலி, ஹலாம், சித்தார்த் பாபு, செம்மலர் அன்னம், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ஊர்வசி கூறும்போது, "எனது 700 வது படமான அப்பத்தா ஓர் அசாதாரண அனுபவமாக அமைந்தது. இந்தப் படம் என் இதயத்தில் தனி இடத்தை பிடித்துள்ளது.
குடும்பப் பிணைப்புகள், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் நம் அச்சங்களை எதிர்கொள்வதன் முக்கியத்துவத்தின் சாராம்சத்தை கதை அழகாகப் படம் பிடித்து காட்டுகிறது. பிரியதர்ஷன் தலைமையிலான திறமையான குழுவுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளித்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்