Actress Trisha: நடிகை திரிஷாவுக்கு கொஞ்சநாள்ல கல்யாணம்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Trisha: நடிகை திரிஷாவுக்கு கொஞ்சநாள்ல கல்யாணம்?

Actress Trisha: நடிகை திரிஷாவுக்கு கொஞ்சநாள்ல கல்யாணம்?

Marimuthu M HT Tamil
Sep 21, 2023 10:05 AM IST

நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை திரிஷாவுக்கு கொஞ்சநாள்ல கல்யாணம்?
நடிகை திரிஷாவுக்கு கொஞ்சநாள்ல கல்யாணம்?

மிஸ் சென்னை பட்டம் வென்று, ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக தமிழ் சினிமாவில் கால் பதித்தவர், நடிகை திரிஷா. 2002ஆம் ஆண்டு, மெளனம் பேசியதே- திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின், விஜய், அஜித்,சூர்யா எனப்பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்து புகழ்பெற்றார். விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸியையும், 96 பட ஜானுவையும் நாம் நினைவில் வைக்க காரணம், அதில் நடித்த திரிஷாவும், அவரது ஃபெர்பாமன்ஸும் தான் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் கூட குந்தவையாக நடித்து பட்டையைக் கிளப்பியிருந்தார், திரிஷா. இந்நிலையில் 40 வயதைத் தொட்ட நடிகை திரிஷா, தெலுங்கு திரையரங்கினை சார்ந்த ஒரு தயாரிப்பாளரை மணமுடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. முன்னதாக, வருண் மணியன் என்னும் தயாரிப்பாளருடன் திரிஷாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பெற்று, அத்திருமணம் நடைபெறாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.