HBD Taapsee: நடிப்பு மட்டும் இல்ல.. ஈவென்ட் மேனேஜ்மென்ட் கூட.. டாப்ஸி பற்றி தெரியாத விஷயங்கள்
நடிகை டாப்ஸி இன்று தனது கொண்டாடி வருகிறார்.

<p>நடிகை டாப்சி பன்னு
நடிகை டாப்ஸி இன்று (ஆகஸ்ட் 1) தனது 36 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவர் குறித்துத் தெரியாத சில விஷயங்களை இதில் பார்ப்போம்..
நடிகை டாப்ஸியை வீட்டில் செல்லமாக மேகி என்றே அழைப்பார்கள். சிறு வயதிலேயே கதக் மற்றும் பரத நாட்டியம் கற்றுக்கொண்டார். கல்லூரி படிக்கும் வரை ஆர்வமாகப் பயின்று வந்தார். பின்னர் படத்தின் படப்பிடிப்பு காரணமாக அவர் அதில் கவனம் செலுத்தவில்லை.
சினிமாவில் நுழைந்தால் பல நடிகர்கள் தங்களின் படிப்பை பாதியில் நிறுத்திவிடுகின்றனர். ஆனால் டாப்ஸி டெல்லியில் பள்ளிப் படிப்பை முடித்து, மென்பொருள் எஞ்சினியரிங் முடித்தார். படிப்பிற்கு பிறகு ஒரு மென்பொருளை இவரே உருவாக்கினார்.