Actress Sumathi: ‘விஜயகாந்த் எங்கே.. விஷால் எங்கே..?’ நடிகை சுமதி ‘நச்’ பேட்டி!
‘விஜயகாந்த் பழைய மாதிரி இருந்திருந்தால், நாங்கெல்லாம் எங்கேயோ போயிருப்போம். எங்களுக்கு தெய்வம் அவர். அவரை மாதிரி ஒரு மனுசன் வர முடியாது’
நடிகர் வடிவேலு அணியில் குறிப்பிட்ட சில பெண் நடிகைகளே இருந்த நிலையில், அதில் முக்கியமானவர் நடிகை சுமதி. வடிவேலு உடன் 18 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். யூடியூப் ஒன்றுக்கு அவர் அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:
‘‘உழைத்தால் தான் பணம் வரும். பணம் இருந்தால் உழைக்க வேண்டியதில்லை. எனக்கு சினிமா தான் பணம் தருது, சினிமா தான் எனக்கு முக்கியம். துரோகம் இல்லாத சினிமா இல்லை. எனக்கு நிறைய துரோகம் நடந்திருக்கு.
நிறைய அடிபட்டு வந்திருக்கேன். இன்னமும் மறக்க முடியாத சூழ்நிலைகளை நான் நினைவில் வைத்திருக்கிறேன். நாங்கள் வந்த காலகட்டத்தில் ஒரு கூட்டத்தில் நின்று கொண்டிருந்த போது, வடிவேலு சாரை பார்த்து ஒரு வணக்கம் போட்டேன். ‘ஒரு டயலாக் இருக்கு பேசுறீயா?’ என்று வடிவேலு கேட்டார். சரி என்று நடித்தேன். குண்டக்க மண்டக்கா படம் தான் என்னுடைய முதல் படம்.
என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு, ‘நல்லா பண்றாடா, இவ நம்பர் வாங்கி வெச்சிக்கோ’ என உதவியாளரிடம் வடிவேலு சொன்னார். அதை தொடர்ந்து அவருடன் 10 படங்கள் பண்ணேன். அப்போ ரொம்ப குறைவான சம்பளம் தான். அப்போதெல்லாம் என் வாய்ப்புகளை பார்த்து என் காதுக்கு கேட்கும் படி கூட பொறாமையாக பேசியவர்கள் உண்டு.
விஜயகாந்த் பழைய மாதிரி இருந்திருந்தால், நாங்கெல்லாம் எங்கேயோ போயிருப்போம். எங்களுக்கு தெய்வம் அவர். அவரை மாதிரி ஒரு மனுசன் வர முடியாது. இப்போ விஷால் உதவி பண்றாருனா, அது அவரோட பதிவிக்காக. ஆனால் கேப்டன் அப்படி இல்ல. கேப்டன் மாதிரி ஒருத்தர் இனி வரவே முடியாது.
எம்.ஜி.ஆர்.,க்கு அடுத்து அவர் தான். எல்லாரும் வேலை செய்யனும், எல்லாரும் நல்லா இருக்கனும் என நினைப்பவர் விஜயகாந்த். நான் அவரோடு அதிகம் பழகியதில்லை, பேசியதில்லை. அவரோடு தீவிர ரசிகை நான். என் கணவரும் தீவிர ரசிகர்.
கஜேந்திரா உள்ளிட்ட இரு படங்கள் விஜயகாந்த் சாரிடம் பண்ணிருக்கேன். யூனியன் பக்கம் இப்போ நான் போறதில்லை. என் நண்பர்கள் தான் அவ்வப்போது யூனியன் வேலைகளின் அப்டேட் சொல்லுவாங்க.
வடிவேலு சார் குரூப்பில், நான் தான் லேடி. அவர்கள் சேர்ந்து பேசும் போது, ‘டேய்… நம்ம வீட்டு புள்ளடா அவ, அவளை பேசாதீங்கடா..’ என்று வடிவேலு சொல்லுவார். என்னை அவர் ஒரு வார்த்தை கூட தப்பா பேசமாட்டார். அவரை பற்றி இன்று வெளியில் பேசுவதை கேட்கும் போது கஷ்டமா தான் இருக்கு. இந்த இடத்தில் நின்று நாங்கள் பேசுகிறோம் என்றால் வடிவேலு சாருக்கு தான் நன்றி கூற வேண்டும்.
காமெடியாகவும், ரவுடித்தனமாக தான் என்னை பார்க்கிறார்கள். அம்மா, அக்கா கேரக்டர்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும். நடிகைகளுக்குள் பயங்கர போட்டி இருக்கும். ‘நேற்று வந்தவளுக்கு இத்தனை வாய்ப்பா’ என்றெல்லாம் பேசுவார்கள்.
விஜய், அஜித் எல்லாம் வாய்ப்பு கொடுத்தால் வாழ்க்கையே மாறிவிடும். ஏகப்பட்ட இயக்குனர்கள் ஒதுக்குகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. ‘டிவியை திறந்ததும் நீங்கள் தான் வர்றீங்க’ என்று சில இயக்குனர்கள் கூறுகிறார்கள். ஆனால், வாய்ப்பு தராமல் அனுப்பிவிடுகிறார்கள். வடிவேலு சாருடன் 18 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன், ஒரு நாள் கூட அவர் திட்டியதில்லை’’
என்று அந்த பேட்டியில் நடிகை சுமதி கூறியுள்ளார்.
டாபிக்ஸ்