Sulakshana interview: 23 வயதில் விவாகரத்து.. நொறுங்கி விழ வைத்த கணவர்.. காசு வாங்காத கர்வம்!- சுலக்ஷனா ஜெயித்த கதை!
ஒரே நேரத்தில் நாயகியாகவும், அம்மாவாகவும் என்னால் இருப்பது கடினமாக இருந்தது. இதனால் நான் சினிமாவில் இருந்து ஒரு ஏழு வருடங்கள் இடைவெளி எடுத்துக் கொண்டேன்.
பிரபல நடிகையான நடிகை சுலக்ஷ்னா தன்னுடைய விவாகரத்து கதையை அவள் கிளிட்ஸ் சேனலுக்கு அண்மையில் பகிர்ந்தார்
அதில் அவர் பேசும் போது, “ ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் இருவருக்கும் அந்த ரிலேஷன்ஷிப்பில் சந்தோஷம் கிடைக்கவில்லை என்றால், பிரிந்து செல்வது என்பது எவ்வளவோ நல்லது. அந்த சமயத்தில் நான் விவாகரத்து முடிவை எடுத்த பொழுது, மிக மிக வருத்தப்பட்டேன், காயப்பட்டேன். இப்போது கூட அந்த முடிவு என்னை வருத்தமடைய செய்து கொண்டு தான் இருக்கின்றது.
வெளியே தெரியவில்லை அவ்வளவுதான். நான் அப்போது வருத்தப்பட்டதற்கான காரணம் எனக்கு குழந்தைகள் இருந்தார்கள். அப்படி இருக்கும் பொழுது நாம் நம்முடைய எதிர்காலத்தை பார்ப்போமா? இல்லை குழந்தைகளின் எதிர்காலத்தை பார்ப்போமா? விவாகரத்து முடிவு நீதிமன்றத்தில் உறுதியாகி வந்த அன்றைய தினம் நான் கதறி அழுதேன். எல்லோரும் என்னை சமாதானப்படுத்தி, ஆறுதல் சொன்னார்கள் ஆனாலும் என்னுடைய மனம் வருத்தப்பட்டு கொண்டுதான் இருந்தது.
கிட்டத்தட்ட ஒரு இரண்டு மணி நேரம் அழுது கொண்டே இருந்தேன். அதன் பின்னர் அது தொடர்பான எண்ணங்கள் என்னுடைய மனதில் இருந்து சென்று விட்டன. நான் அவரிடம் இருந்து பணம் எதையும் இழப்பீடாக நான் வாங்கவில்லை. எனக்கு மகன்கள் இருக்கிறார்கள் இதைவிட எனக்கு என்ன வேண்டும். என்னை வழக்கறிஞர் அவ்வளவு வற்புறுத்தினார். ஆனால் நான் அவரிடம், என்னிடம் கை கால் நன்றாக இருக்கிறது மூளைநன்றாக செயல்படுகிறது.; சக்தி இருக்கிறது; நான் எதையும் செய்து விடுவேன் என்ற தன்னம்பிக்கை இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது எனக்கு ஏன் அடுத்தவருடைய பணம் என்று நான் சொன்னேன்.
ஒரே நேரத்தில் நாயகியாகவும், அம்மாவாகவும் என்னால் இருப்பது கடினமாக இருந்தது. இதனால் நான் சினிமாவில் இருந்து ஒரு ஏழு வருடங்கள் இடைவெளி எடுத்துக் கொண்டேன்.
இந்த ஏழு வருட இடைவெளியில் முழுக்க முழுக்க என்னுடைய மகன்களுக்கு அம்மாவாக மட்டுமே இருந்தேன். அந்த ஏழு வருட இடைவெளிக்கு பிறகு என்னுடைய மகன்களின் அனுமதியோடு மீண்டும் நடிக்க ஆரம்பித்தேன்” என்று பேசினார்.
டாபிக்ஸ்