HBD Sukumari: தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.. கலையின் நாயகி சுகுமாரி பிறந்தநாள்
நடிகை சுகுமாரின் 83வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தமிழ் சினிமா நூறாண்டுகளை கடந்து வெற்றிகரமான தனது வரலாற்று பயணத்தை மேற்கொண்டு வருகிறது. எத்தனையோ கலைஞர்களை இந்த தமிழ் சினிமா கண்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாத பல்வேறு மாநிலங்களில் இருந்து எத்தனை பேர் கலைஞர்கள் தமிழ் சினிமாவால் வாழ்க்கை பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து பல மொழிகளுக்கு சென்று நடித்துவிட்டு மிகப்பெரிய நடிகர்களாக வலம் வந்த எத்தனையோ திரை பிரபலங்கள் இங்கு உள்ளனர். தமிழ் சினிமாவில் வரலாற்று நாயகியாக இன்று வரை மனோரமா அனைவரும் மத்தியில் நினைவில் வாழ்ந்து வருகிறார்.
அப்படி ஒரு நடிகை நம் தமிழ் சினிமாவில் இன்னொருவர் இருக்கிறார் என்று கூறினால் அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படும். 1940 ஆம் ஆண்டு அக்டோபர் ஆறாம் தேதி நாகர்கோவிலில் பிறந்தவர் நடிகை சுகுமாரி. மறைந்த பிரபல நடிகை பத்மினியின் மாமன் மகள் தான் இவர்.