Actress sona: கோலிவுட் குளறுபடிகள்…வெட்கப்படாத நடிகைகள்.. ‘அட்ஜஸ்ட்மென்ட் வேற லெவலுக்கு போயிருச்சு’ - நடிகை சோனா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Sona: கோலிவுட் குளறுபடிகள்…வெட்கப்படாத நடிகைகள்.. ‘அட்ஜஸ்ட்மென்ட் வேற லெவலுக்கு போயிருச்சு’ - நடிகை சோனா

Actress sona: கோலிவுட் குளறுபடிகள்…வெட்கப்படாத நடிகைகள்.. ‘அட்ஜஸ்ட்மென்ட் வேற லெவலுக்கு போயிருச்சு’ - நடிகை சோனா

Kalyani Pandiyan S HT Tamil
Jul 17, 2024 03:56 PM IST

Actress sona: நான் ஆரம்ப காலகட்டத்தில் கிளாமரான ரோல்களில் நடித்தேன். இப்போது உட்கார்ந்து புலம்பி கொண்டிருக்கிறேன். அதனால் ஏற்பட்ட பாதிப்பை முழுக்க முழுக்க நானே அனுபவிக்கிறேன். - நடிகை சோனா

Actress sona: கோலிவுட் குளறுபடிகள்…வெட்கப்படாத நடிகைகள்..   ‘அட்ஜஸ்ட்மென்ட் வேற லெவலுக்கு போயிருச்சு’ - நடிகை சோனா
Actress sona: கோலிவுட் குளறுபடிகள்…வெட்கப்படாத நடிகைகள்.. ‘அட்ஜஸ்ட்மென்ட் வேற லெவலுக்கு போயிருச்சு’ - நடிகை சோனா

அந்த அடையாளத்தை உடைப்பதற்காக

அந்த பேட்டியில் அவர் இது குறித்து அவர் பேசும் போது, “நான் நிறைய கிளாமரான ரோல்களில் நடித்து விட்டேன். ஒரு கட்டத்தில் எனக்கு அது மிகவும் போர் அடித்து விட்டது. அந்த அடையாளத்தை உடைப்பதற்காக நிறைய வேலைகள் செய்தேன். ஆனால் எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை. 

முன்னதாக, என்ன நடந்தாலும் சரி நான் சினிமாவை விட்டு, சின்னத்திரை பக்கம் செல்ல மாட்டேன் என்று முடிவில், மிக மிக உறுதியாக இருந்தேன். அதை பல நேர்காணல்களிலும் நான் ஓப்பனாக கூறியிருக்கிறேன். ஆனால் கிளாமர் நடிகை அடையாளத்தை உடைக்க, தாய்மார்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டி இருந்தது. அதற்கு ஒரே வழி சின்னத்திரைதான். இதனால் வேறு வழியில்லாமல் சீரியல் பக்கம் சென்றேன். 

எடை போட்டு விடுகிறார்கள்.

சீரியல்களில் நான் வாய்ப்பு கேட்டு செல்லும் பொழுது, நானே முன் வந்து, எனக்கு அம்மா ரோல் கொடுங்கள் என்று தைரியமாக கேட்டேன். அப்படிப்பட்ட ஒரு முடிவை நான் எடுப்பதற்கு காரணம் என்னவென்றால், நான் போடுகிற ஆடைகள், நான் நடிக்கிற காட்சிகள் உள்ளிட்டவற்றை வைத்து, மற்றவர்கள் ஈசியாக என்னை அவள் இப்படித்தான் என்று எடை போட்டு விடுகிறார்கள். 

நான் திரைத்துறைக்கு வந்த காலத்தில், அட்ஜஸ்ட்மென்ட் என்பது மிகவும் சகஜமான ஒன்றாகதான் இருந்தது. ஆனால் இப்போது, அது ஒரு படி மேலே சென்று, வாய்ப்பு கேட்டு வருகிறவர்களே தானாக முன் வந்து, இயல்பாக அதற்கு ஓகே என்று சொல்லி வருகிறார்களாம். ஆனால் அவை அனைத்தும்  அவர்களின் தனிப்பட்ட முடிவைச் சார்ந்ததுதான். 

நான் ஆரம்ப காலகட்டத்தில் கிளாமரான ரோல்களில் நடித்தேன். இப்போது உட்கார்ந்து புலம்பி கொண்டிருக்கிறேன். அதனால் ஏற்பட்ட பாதிப்பை முழுக்க முழுக்க நானே அனுபவிக்கிறேன். அதேபோலத்தான் அவர்களுக்கும் அது நடக்கும். அதற்கான பாதிப்பு அவர்களை வந்து தீரும். அதை நாம் வெளியில் இருந்து சரி தவறு என்றெல்லாம் எடை போட்டுக் கொண்டிருக்கக் கூடாது” என்று பேசினார். 

முன்னதாக, பிரபல நடிகையான அனுஜா ரெட்டி, தான் நடித்த கிளாமர் கதாபாத்திரங்கள் பற்றியும், அதனால் ஏற்ப்பட்ட சலிப்பின் காரணமாக, காமெடி கதாபாத்திரங்கள் சென்றது குறித்தும் ஆதன் சினிமா சேனலுக்கு பேசி இருந்தார். அந்த பேட்டி!

கதாநாயகி டூ கிளாமர் நடிகை

அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “உண்மையில் நான் திரைத்துறைக்கு பாடல்களில் நடிப்பதற்காகத்தான் வந்தேன். முதலில் நான் நடித்த திரைப்படம் ஒரு மலையாள படம். அந்த படத்தில் நடிக்கும் பொழுது, எனக்கு 14 வயது. அந்த படத்தில் நான் கதாநாயகியாக நடித்தேன். ஆனால், அந்த படம் கடைசி வரை ரிலீசே ஆகவில்லை. இதனையடுத்து, நான் எனக்கு இனி திரைப்படங்களே வேண்டாம் என்று முடிவு எடுத்தேன். இதற்கிடையே, கோடம்பாக்கத்தில் ஆந்திராவில் இருந்து பெண் ஒருவர் நடிக்க வந்தார். அவருக்கு துணையாக நானும் வந்தேன். ஆனால், என்னை பார்த்த தயாரிப்பு குழுவினர், என்னை புக் செய்து விட்டார்கள்.

இதை நான் என்னுடைய பெற்றோரிடம் சொல்லும் பொழுது அவர்களும் சம்மதித்த காரணத்தால், நான் நடித்தேன். ஆனால், அந்தப் படமும் ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து நான் சினிமாவே வேண்டாம் என்று மீண்டும் முடிவெடுத்தேன். அதன் பின்னர், நான் பாடல்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது பாபு என்ற மிகவும் பிரபலமான ஒரு நடன இயக்குனர் இருந்தார். அவர் தான் என்னை வற்புறுத்தி, திட்டி முதல் வசந்தம் மற்றும் பூக்களை பறிக்காதீர்கள் ஆகிய திரைப்படங்களில் நடிக்க வைத்தார். அந்த படங்கள் ஹிட்டானதை தொடர்ந்து, எனக்கு மீண்டும் படங்கள் வர ஆரம்பித்தன.

எனக்கே சினிமாவில் ஆர்வம் வந்துவிட்டது

அதன் பின்னர் எனக்கே சினிமாவில் ஆர்வம் வந்துவிட்டது. அதன் பின்னர் எவ்வளவு நாட்கள் தான் நாம் இப்படியே பாடல்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்க முடியும் என்று யோசித்து, காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கலாம் என்று முடிவு எடுத்தேன். அப்படியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் பொழுது, சேரன் பாண்டியன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய படங்களில், என்னுடைய கதாபாத்திரங்களை அப்படியே கிளாமர் பக்கம் மாற்றி விட்டார்கள்.

முன்பு பாடல்களில் கிளாமரான காட்சிகளில் நடிக்கும் பொழுது எனக்கு எந்தவித தயக்கமும் இருந்ததில்லை. காரணம், அதை நான் ஒரு தொழிலாக பார்த்தேன். எப்படி அலுவலகத்திற்கு சென்று மக்கள் வேலை செய்கிறார்களோ, அதே போல, இதுவும் எனக்கு ஒரு வேலை என்பதை என்னுடைய மனதில் நிலைநிறுத்திக் கொண்டேன். அதனால், எனக்கு அதில் பயத்தைப் பற்றியோ, இன்ன பிற விஷயங்கள் பற்றியோ கவலை வரவில்லை. காரணம், நமது உடலில் எங்கேயாவது ஆடை இல்லையே என்ற ஒரு தயக்கம் மனதிற்குள் வந்து விட்டால், நம்மால் இயல்பாக நடனம் ஆட முடியாது. அடி அம்மாடி சின்ன பொண்ணு பாட்டில் தான் முதன்முறையாக நான் நடனம் ஆடினேன்” என்று பேசினார்.

 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.