Sona Heiden: 'அது மட்டும் பண்ண மாட்டேன்' - 20 படங்களை இழந்த சோனா.. பின்னணி என்ன?
நடிகை சோனா சினிமாவில் தான் சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசினார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சோனா. கவர்ச்சி வேடங்கள் மூலம் பிரபலமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்தார். மூன்று மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்
சோனா தனது வாழ்க்கையில் பல சவால்களை சமாளிக்க வேண்டியிருந்தது என பேட்டி அளித்து உள்ளார்.
அவர் கூறுகையில், “நான் சினிமாவுக்கு வருவதற்கு நிதி நெருக்கடி தான் காரணம். என்னால் நடிக்க முடியும் என்று நினைக்கவில்லை. வீட்டின் நிலைமை மோசமாக இருந்ததால் நடிக்க முடிவு செய்தேன். நடிக்க வருவதற்கு முன்பு சலவைக் கடையில் வேலை பார்த்தேன்.
அப்போது கடையில் ஒரு நாளைக்கு சம்பளம் 350 ரூபாய். ஆனால் படத்தில் நடித்தபோது 25,000 ரூபாய் வரை சம்பளம் வாங்க ஆரம்பித்தேன். இதனால் தான் நான் சினிமாவில் நுழைந்தேன். ஆரம்பத்தில் தான் நடித்த படங்களின் படக்குழுவினர் அனைவரும் நன்றாக இருந்தார்கள். அதனால் எனது கேரியரை தொடர முடிவு செய்தேன்.
பின்னர் நாட்கள் செல்ல செல்ல அப்போது தான் சிரமங்களை சந்தித்தேன். அட்ஜஸ்ட்மென்ட் பேச்சு அரம்பமானது. நான் அதற்கு தயாராக இல்லை. சம்மதம் சொல்லாத காரணத்தினால் 20 க்கும் மேற்பட்ட படங்களை கைவிட நேரிட்டது.
யாராவது வந்து அட்ஜஸ்ட்மென்ட் சொன்னால் தவிர்த்துவிடுவேன். தமிழில் படம் செய்துவிட்டு, தெலுங்கிற்குப் போனேன். முதல் படத்திலேயே அரை சேலையில் கிளாமரான காட்சி. அப்படித்தான் கிளாமர் காட்சி தொடங்கியது.
நான் அதைக் குறித்து குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன், ஆனால் அது குற்றமா என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் இன்று அதன் மூலம் சோனாவை பலரும் தெரிந்து கொண்டார்கள். தனிப்பட்ட முறையில், நான் குற்ற உணர்ச்சியாக உணர்கிறேன். தொழில் ரீதியாக இது ஒரு பிரச்னையாகத் தெரியவில்லை' என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்