Sherin: ‘என் நாயை கூட அவங்க விட்டு வைக்கல’ நடிகை ஷெரின் ஷாக் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sherin: ‘என் நாயை கூட அவங்க விட்டு வைக்கல’ நடிகை ஷெரின் ஷாக் பேட்டி!

Sherin: ‘என் நாயை கூட அவங்க விட்டு வைக்கல’ நடிகை ஷெரின் ஷாக் பேட்டி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jul 02, 2023 05:30 AM IST

Actress Sherin: ‘நான் என் வாழ்க்கையை ப்ளான் பண்ணாமல் ஓட்டுகிறேன். அதனால் தான் சிறப்பாக போகிறது. வருங்காலத்தில் ஒரே ஒரு ஆசை’

நடிகை ஷெரின்
நடிகை ஷெரின் (sherinshringar Instagram)

‘‘2008ல் ஒரு நிகழ்ச்சியை என்னுடைய நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நான் அதில் பங்கேற்றனர். அதில் ‘ஒரு நாளுக்கு நீங்க DJ ஆகலாம், உங்க விருப்ப பாடலை கொடுங்க’ என்று கூறியிருந்தார்கள். அப்படி தான் DJ கத்துக் கிட்டேன். அது ஒரு விருப்பமாக மாறியது. DJ மிக்ஸிங் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. வீட்டிலேயே நிறைய மியூசிக் கேட்டிட்டு இருப்பேன். இப்போ கூட என்னால DJ ப்ளே பண்ண முடியும். 

இன்ஸ்ட்டாகிராம்ல போடுற வீடியோ எல்லாமே நானே ஷூட் பண்ணிக்கிறேன். நானே அதை எடிட் பண்ணி, அப்லோட் பண்ணிக்கிறேன். ஆனால் என்னால முடியாத ஒன்றே ஒன்று, எனக்க மேக்கப் போடத் தெரியாது. இன்னும் நான் முயற்சிப் பண்ணிட்டு இருக்கேன். என் நிறத்தை பார்த்து எனக்கு மேக்கப் தேவையில்லை என நினைப்பார்கள். ஆனால், உண்மையில் எனக்கு மேக்கப் தேவையிருக்கும். ஆனால் அது எனக்கு வராது. 

சினிமாவில் பிரேக்குக்கு முன்னாடி இளைஞர்கள் நிறைய ரசிகர்களாக இருந்தனர். ரத்தத்தில் எல்லாம் எனக்கு கடிதம் வரும். அவ்வளவு கடிதம் வரும். அனைவருக்கும் நான் பதில் கடிதம் எழுதுவேன். அப்போ சோஷியல் மீடியா இல்லை. இப்போ சோஷியல் மீடியா இருக்கு, அதில் நம்மை ஃபாலோ பண்றவங்களை தான் ரசிகர்னு சொல்றோம். 

இப்போ என்னோட ரசிகர்கள் எல்லா வயதிலும் இருக்கிறார்கள். சின்ன குழந்தையில் இருந்து பெரியவர் வரை எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். பெண்கள் கூட எனக்கு ரசிகர்களாக உள்ளனர். இதெல்லாம் சினிமாவுக்கு பிறகு, பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் நடந்தது. 

நடுவில் என்னை ஒருத்தர் மீடியாவில் இழுத்து பேசினார். அதனால் எனக்கு சில வெறுப்பாளர்கள் உருவாகினர். நான் அதை கண்டுகொள்ளவில்லை, ‘ச்சீ போயா..’ என விட்டுவிட்டேன். என்னோட பெற்றோரிலிருந்து என்னுடைய நாய் வரை சீண்டிப்பார்த்தார்கள். 

என்னுடைய பிரச்னையை என்னால் கடந்து போக முடியும். என்னால், என் குடும்பத்தாருக்கு ஒரு பிரச்னை வரும் போது, அதை எப்படி என்னால் கடந்து போக முடியும்? உடைந்து போய் அழுதிருக்கேன். என் அம்மாயை பிடித்துக் கொண்டு அழுதிருக்கேன். 

‘நான் பிக்பாஸ் போனது, என்னோட விருப்பத்தினால தான், உங்களை ஏன் நடுவில் இழுக்கிறாங்க என்று தெரியவில்லை’ என்று அழுதேன். என்னை திட்டலாம், என் அம்மாவை எதுக்கு திட்ட வேண்டும்? அதில் என்ன நியாயம் இருக்கு? யாரோ ஒருத்தர் எங்கேயோ அமர்ந்து கொண்டு, இன்னொருவரைப் பற்றி தவறாக எழுதிகிறார்கள் என்றால், அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு தவறானவராக இருப்பார்கள்?

சோஷியல் மீடியாவால் நிறைய பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கு. அவர்கள் எந்த ஒரு விசயத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டியதில்லை. சோஷியல் மீடியாவில் ஃபாலோவர்ஸை அதிகரித்து, விரும்புவதை பேசலாம். கேட்க ஆள் இருக்கிறார்கள். நிறைய ப்ளஸ் சோஷியல் மீடியாவில் இருந்தாலும், மிரட்டல் வரும், அச்சுறுத்தல் வரும். அது தான் சோஷியல் மீடியாவின் தீமைகள். 

நான் என் வாழ்க்கையை ப்ளான் பண்ணாமல் ஓட்டுகிறேன். அதனால் தான் சிறப்பாக போகிறது. வருங்காலத்தில் ஒரே ஒரு ஆசை. ஒரு பண்ணை, அதில் நிறைய விலங்குள் இருக்க வேண்டும், அதில் நான் இருக்க வேண்டும். 

தனி பெண்ணாக என் அம்மா என்னை கஷ்டப்பட்டு வளர்த்தார். சினிமாவுக்கு வந்து நான் அவர்களுக்கு உதவிவேன். எங்களை விட்டு விட்டு போனவர் என் அப்பா. ஆனால், இந்த சமூகம் என் அம்மாவை வில்லியாக பார்த்தது. சமுதாயம் மீது எனக்கு கோபம் இருக்கு. யாரும் எங்களுக்கு உதவவில்லை,’’

என்று ஷெரின் அந்த பேட்டியில் கூறியிருந்தார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.