Actress Seetha: ‘காதல் பற்றி பார்த்திபன் சொல்வது பொய்’ -நடிகை சீதா ஆவேசம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Seetha: ‘காதல் பற்றி பார்த்திபன் சொல்வது பொய்’ -நடிகை சீதா ஆவேசம்!

Actress Seetha: ‘காதல் பற்றி பார்த்திபன் சொல்வது பொய்’ -நடிகை சீதா ஆவேசம்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 25, 2023 06:20 AM IST

தன்னுடைய காதல் பற்றி நடிகர் பார்த்திபன் பேசி வருவது பொய் என்று நடிகை சீதா பேசியிருக்கிறார்.

நடிகை சீதா
நடிகை சீதா

1989 ஆம் ஆண்டு நடிகரும், இயக்குநருமான பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சீதா, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இந்தத்தம்பதிக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். அதனைத்தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு தன்னுடைய 43 ஆவது வயதில், சீரியல் நடிகர் சதீஷை திருமணம் செய்து கொண்ட சீதா அவரையும் திருமணமான 6 ஆண்டுகளில் விவாகரத்து செய்தார். இந்த நிலையில் அண்மையில் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் பார்த்திபன் பல இடங்களில் சீதாதான் தன்னிடம் காதலை வெளிப்படுத்தியதாக பார்த்திபன் சொல்வது பொய் என்று பேசியிருக்கிறார். 

இது குறித்து நடிகை சீதா பேசும் போது, “ எங்கள் இருவருக்குமே அந்த சமயத்தில் உள்ளுக்குள் காதல் இருந்தது. அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் நான் காதலை சொல்லி, அவர் ஏற்றுக்கொள்ளும் நிலைமை என்று அவர் சொல்வது பொய். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், அவர் தினமும் எனக்கு ஃபோன் செய்து அந்த மூன்று வார்த்தையை சொல்லிவிடுங்களேன் ப்ளீஸ் என்று கேட்டுக்கொண்டே இருப்பார். 

எனக்கு அந்த மூன்று வார்த்தையை சொல்வதற்கு 1 வாரம் 10 நாட்கள் ஆனது. அப்படி ஒரு நாள் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதுதான், நான் ஐ லவ் யூ என்று சொன்னேன். ஆனால் என்னுடைய ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், நான் தவறு செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட மாட்டிக்கொண்டு விடுவேன். அன்றையதினமும் அப்படித்தான் நடந்தது. நான் ஐ லவ் யூ சொல்கிறேன். என்னுடைய அப்பா வீட்டில் ஒரே இணைப்பில் இருந்த மற்றொரு ஃபோனில் அதைக்கேட்டு விட்டார். லவ்வை சொன்ன அன்றைய தினமே சண்டை தொடங்கி விட்டது.

நான் உலகமே தெரியாத சராசியான பொண்ணுதான். அவரும் அப்படித்தான். அவரிடம் எனக்கு எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் அது என்ன எதிர்பார்ப்பு என்னவென்றால், சுஹாசினி ஒரு படத்தில் பாடுவாரே ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ அந்த மாதிரியான எதிர்பார்ப்பு. இதுக்கூட இல்லையென்றால், அதன்பின்னர் என்ன இருக்கிறது வாழ்கையில்.” என்று பேசினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.