Tamil News  /  Entertainment  /  Actress Sathyapriya Has Said That Now We Don't Get Good Characters In Cinema.
சத்யபிரியா காட்டம்
சத்யபிரியா காட்டம்

Sathyapriya:கோலங்கள்வாழ்க்கை கொடுக்கல..நடிகர்களால வாய்ப்பு போச்சு.. சத்யபிரியா ப்ளார்!

19 March 2023, 7:00 ISTKalyani Pandiyan S
19 March 2023, 7:00 IST

சினிமாவில் இப்பொழுது எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் கிடைப்பதில்லை என பிரபல நடிகை சத்யபிரியா பேசியிருக்கிறார் 

 

ட்ரெண்டிங் செய்திகள்

‘மஞ்சள் முகமே வருக’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சத்யபிரியா. அதன் பின்னர் ‘பேரும் புகழும்’ ‘கண்ணன் ஒரு கை குழந்தை’ ‘அஞ்சலி’ ‘ரிக்‌ஷா மாமா’ ‘ரோஜா’ ‘சீவலப்பேரி பாண்டி’ ‘பாட்ஷா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். இப்படி கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் ‘புன்னகை’ ‘கோலங்கள்’ ‘ரோஜா கூட்டம்’ உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தற்போது சன் டிவியில் ஒளிப்பரபாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் சினிமாவில் தற்போது கதாநாயகர்களே ஆதிக்கம் செலுத்துவதாகவும், தங்களைப் போன்றவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் கிடைப்பதில்லை நெறு ஆதங்கப்பட்டு இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், “ நான் நிறைய கேரக்டர்கள் செய்திருக்கிறேன். இன்னும் நிறைய கேரக்டர்கள் செய்ய வேண்டும் என்று சொல்வதை விட செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். 

சினிமாவில் இப்பொழுது எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் கிடைப்பதில்லை. பாட்டி கேரக்டர் கிடைத்தாலும் கூட அது சரியாக இல்லை. மனோரமா ஆச்சி இருந்த வரைக்கும் நல்ல கேரக்டர்கள் கிடைத்தது. இப்போது அப்படியான கேரக்டர்களே இல்லை. 

முழுக்க முழுக்க கதாநாயகனை சார்ந்தே படங்கள் இயங்கி வருகின்றன. அதனால் எங்களுக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைப்பதில்லை. சீரியல்களைப் பொறுத்தவரை இன்றைய எபிசோடை பார்ப்பவர்கள் அன்றே அந்த எபிசோடை மறந்து விடுவார்கள். பிறகு அடுத்த எபிசோடு தான். ஆனால் சினிமா அப்படி கிடையாது. இன்றும் ரோஜா படத்தை பற்றி பேசுகிறார்கள்.. பாட்ஷா படத்தை பற்றி பேசுகிறார்கள்..இன்றும் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தை பற்றி பேசுகிறார்கள்..கோலங்கள் சீரியலால் எனக்கு வாழ்க்கை கிடைத்தது என்று சொல்ல முடியாது. என்னுடைய கேரியரில் அது ஒரு முக்கியமான சீரியல். எனக்கு அது ஒரு அடையாளத்தை பெற்று தந்தது இப்பொழுதும் பல இடங்களில் பார்ப்பவர்கள் நீங்கள் தானே அபி அம்மா என்று கேட்கிறார்கள்” என்று பேசினார் 

டாபிக்ஸ்