தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Revathi: அய்யோ நான் செய்த பெரிய தவறு.. காலம் தாழ்ந்து நினைத்து வருந்தும் ரேவதி!

Actress Revathi: அய்யோ நான் செய்த பெரிய தவறு.. காலம் தாழ்ந்து நினைத்து வருந்தும் ரேவதி!

Aarthi Balaji HT Tamil
Jul 06, 2024 06:23 AM IST

Actress Revathi: நடிகை ரேவதி சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் தான் வாழ்க்கையில் செய்த தவறு குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

அய்யோ நான் செய்த பெரிய தவறு.. காலம் தாழ்ந்து நினைத்து வருந்தும் ரேவதி
அய்யோ நான் செய்த பெரிய தவறு.. காலம் தாழ்ந்து நினைத்து வருந்தும் ரேவதி

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் அதிக படங்களிலும், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்ததுடன், இந்தியிலும் நடித்துள்ளார். மூன்று தேசிய விருதுகள், 6 ஃபிலிம் பேர் விருதுகள், சிறந்த நடிகைக்கான கேரள மாநில விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் கேரளாவின் கொச்சியில், பிறந்தவர். இவரது தந்தை மலாங்க் கெலுன்னி நாயர் ராணுவத்தில் மேஜராக இருந்தவர். தாய் லலிதா கெலுன்னி. இவரது படிப்புக்காக இவர்கள் குடும்பம் பிற்காலத்தில் சென்னைக்கு குடி பெயர்ந்தனர்.

ஃபேஷன் ஷோ புகைப்படங்கள்

அவர் பள்ளியில் படித்து கொண்டிருந்த போது, ஒரு முறை பள்ளியில் நடந்த ஃபேஷன் ஷோ புகைப்படங்கள் ஒரு வார பத்திரிக்கையில் வெளியாகின. அந்த புகைப்படங்களை பார்த்த இயக்குனர் பாரதி ராஜா, அவரது மண் வாசனை படத்திற்கு புதுமுக நடிகையை தேடி கொண்டு இருந்தவர், ரேவதியை அவரது படத்திற்கு தேர்ந்தெடுத்தார். அப்படி தான் அவர் படத்திற்குள் முதல் முறையாக வந்தார்.

ரேவதி பேட்டி

இந்நிலையில் நடிகை ரேவதி சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் தான் வாழ்க்கையில் செய்த தவறு குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

 ”நான் கல்யாணம் அந்த வயதில் செய்திருக்க கூடாது. இன்னும் ஒரு நான்கு வருடங்கள் தாண்டி கல்யாணம் செய்து இருக்க வேண்டும். ஏனெனில், அந்த சமயத்தில் தான் மௌனராகம் மற்றும் புன்னகை மன்னன் படங்கள் செய்து இருந்தேன். அது முடிந்ததும் கல்யாணம் செய்து கொண்டேன். இன்னும் கொஞ்சம் நிறைய நல்ல படங்கள் செய்து முடித்த பிறகு கல்யாணம் பண்ணிருக்க கூடாதா? என பல முறை நினைத்து இருக்கிறேன்.

ஆனால், அப்போது அந்த எண்ணம் வரவே இல்லை. அது இப்போது தான் எனக்கு வந்து இருக்கிறது. 17 வயதிலிருந்து 20 வயது வரை படம் நடித்து வந்தேன். பின்னர் திருமணம் செய்து கொண்டேன்.

திருமணத்திற்கு பிறகு ஒரு வருடம் கழித்து மீண்டும் நடிக்க தொடங்கினேன். அதை மக்கள் எப்படியோ ஏற்று கொண்டனர். இப்போது அனைவருக்கும் இருக்கும் தொழில் மீதான ஈடுபாடு குறித்து அப்போது எனக்கு தெரியவில்லை. அதற்கு வயதும் ஒரு காரணமாக இருக்கலாம்” என்றார்.

நன்றி: Touring Talkies

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். 

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.