Ramya Pandian: ‘ஹெல்த் பிரச்சினை..ரொம்ப ரொம்ப வலி.. வேலையும் வரல.. அந்த சமயத்துலதான்’ - வேதனையை பகிர்ந்த ரம்யா பாண்டியன்
நான் உங்களுக்கு ஒன்று கொடுக்கிறேன் என்றால், எனக்கு இன்னொன்று திரும்பி வரும். அதே போல இந்த பிரபஞ்சத்திற்கு நான் ஒன்று கொடுக்கிறேன் என்றால், இந்த பிரபஞ்சமும் எனக்கு ஒன்றை திருப்பிக்கொடுக்கும். இந்த செயல்முறை நமக்குள்ளேயும் நடக்க வேண்டும்.

ரம்யா பாண்டியன்!
வாழ்க்கையில் மோசமான சூழ்நிலைகளில் சிக்கிய போது ஆன்மிகம் எப்படி தனக்கு கைகொடுத்தது என்பது குறித்து நடிகை ரம்யா பாண்டியன் பேசி இருக்கிறார்.
இது குறித்து வாவ் லைஃப் சேனலுக்கு பேசிய ரம்யா பாண்டியன், “ நம்முடைய மூச்சு இருக்கும் வரை நாம் வாழ்வோம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சில சூழ்நிலைகளில் நானும் உடைந்து போகி இருக்கிறேன். ஆனால் நான் மிக சீக்கிரமாகவே எழுந்து விடுவேன்.
நான் எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கிறேன் என்று சொல்கிறீர்கள். எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கிறவர்களுக்கு பிரச்சினையே இருக்காது என்று அர்த்தமல்ல. அந்த பிரச்சினையை சிரித்த முகத்தோடு எதிர்கொள்கிறோம் என்று வேண்டுமென்றால் சொல்லிக் கொள்ளலாம்.