Prema Priya: வடிவேலு தான் காரணம்.. கதறி ஷாக் கொடுத்த பிரேமா பிரியா
நடிகை பிரேமா பிரியா, வடிவேலு தன் திரை வாழ்க்கையை அழித்துவிட்டதாக வேதனை தெரிவித்து உள்ளார்.
நடிகை பிரேமா பிரியா சமீபத்தில் யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி அளித்து இருந்தார். அப்போது அவர் வடிவேலு தன் திரை வாழ்க்கையை அழித்துவிட்டதாக வேதனை தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில், “தமிழ் சினிமாவில் என்னை தேடி நிறைய கதாபாத்திரங்கள் வந்தன. ஆனால் நடுவில் வடிவேலு நுழைந்ததால், அது மற்ற நடிகைகளுக்கு சென்றுவிட்டன. நான், வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து உள்ளேன்.
ஆனால், திரையுலகில் என் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியது வடிவேலு தான். பல வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தாலும் அதையெல்லாம் தடுத்தது விடுவார். நல்ல படங்களும் அவரால் தோல்வியடைந்தன. முன்னதாக வடிவேலுவுக்கு எதிராகப் பேசியதற்காக என்னை ஒரு இயக்குநர் படத்தில் நடிக்க வைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல்அந்த வீடியோவை நீக்கச் சொன்னார்கள். மன்னிப்பும் கேட்க சொன்னார்கள். ஆனால் நான் கேட்கவில்லை. என்னால் நான் சொன்ன அனைத்துமே உண்மை தான்.
வடிவேலு மீது மீடூ புகார் அளித்திருக்கலாமே என பலரும் கேட்கிறார்கள். ஆனால் எனக்கு வடிவேலுவுடன் மீடூ பிரச்னை இல்லை. அது வேறு பிரச்னை. இப்போது தான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்.
கொரோனா காலத்தில் என் தாய், தந்தை, கணவர் உள்ளிட்ட சொந்தங்களை இழந்துவிட்டேன். என் கணவருக்கு பல உறுப்புகள் செயலிழந்ததால் இரண்டு மாதங்களாக கஷ்டப்பட்டு இறந்தார். அந்த நேரத்தில் நான் பொருளாதார சிக்கலில் இருந்தேன். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. பின்னர் நடிகர் சூரி தான், நிதி ரீதியாக எனக்கு உதவி செய்தார்” என்றார்.
பிரேம பிரியா, ‘வல்லவன்’, ‘சிங்கம்’, ‘ராஜா ராணி’, ‘மனிதன்’, ‘ஹர ஹர மஹா தேவகி’, ‘ஆடை’, ‘சபாபதி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர், நடிகை வடிவேலு, சந்தானம், சூரி ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளார். அதே நடிகை தற்போது வடிவேலு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து இருப்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்