Shamna kasim: ‘ பேறு காலத்தில் கூடிய எடை.. பன்னி மாதிரி இருக்கேன்னு..’ - கொந்தளித்த பூர்ணா!-actress poorna shamna kasim latest interview about her husband and pregnancy negative comments - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shamna Kasim: ‘ பேறு காலத்தில் கூடிய எடை.. பன்னி மாதிரி இருக்கேன்னு..’ - கொந்தளித்த பூர்ணா!

Shamna kasim: ‘ பேறு காலத்தில் கூடிய எடை.. பன்னி மாதிரி இருக்கேன்னு..’ - கொந்தளித்த பூர்ணா!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 04, 2024 05:30 AM IST

நான் ஒரு இஸ்லாமியர் ஒருவரை கல்யாணம் செய்து துபாய்க்கு செல்வேன் என்று நான் கனவிலும் நினைத்தது கிடையாது. நான் இப்போது உணர்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த மனிதரிடம் சென்று சென்று சேர்ந்திருக்கிறேன் என்று.

நடிகை பூர்ணா பேட்டி
நடிகை பூர்ணா பேட்டி

அவர் பேசும் போது, “அவருடைய சப்போர்ட் இருப்பதால்தான் நான் இப்போது இங்கே இருக்கிறேன். வாழ்க்கையில் நான் இந்த இடத்தில் இருப்பதற்கு மிகப்பெரிய பங்காக இருந்தவர் என்னுடைய அம்மா. 

என்னிடம் கல்யாணம் என்று சொன்னபோது, உள்ளுக்குள் ஒரு வித பயம் வந்து விட்டது. காரணம், திரைத்துறையில் நான் என்னுடைய நண்பர்கள் பலரை பார்க்கிறேன். சில காலம் வாழும் அவர்கள் விவாகரத்து செய்து கொள்கிறார்கள். அந்த விவாகரத்திற்கு அவர்கள் பணிகள் சார்ந்த குழப்பங்களும், அதில் ஏற்படும் பிரச்சினைகளே காரணமாக இருந்திருக்கின்றன. 

என்னால் சினிமாவை விட்டு இருக்க முடியாது என்பது நன்றாகவே தெரியும். இன்னொன்று நடனம். இவை இரண்டு தான் எனக்கு தெரியும். ஒரு பெண் சுதந்திரமாக இருப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக பொருளாதார சுதந்திரம். 

எனக்குப்பிடித்த பொருள்களை நான் என்னுடைய கணவரிடம் கேட்பதில்லை. நானே வாங்கிகொள்கிறேன்.  என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய அம்மா எனக்கு எப்படி இருந்தாரோ? அப்படித்தான் இப்போது என்னுடைய கணவர் எனக்கு இருக்கிறார். 

நான் ஒரு இஸ்லாமியர் ஒருவரை கல்யாணம் செய்து துபாய்க்கு செல்வேன் என்று நான் கனவிலும் நினைத்தது கிடையாது. நான் இப்போது உணர்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த மனிதரிடம் சென்று சென்று சேர்ந்திருக்கிறேன் என்று.

கர்ப்பம் தரித்து பிள்ளை பெற்றதற்குப் பிறகு எல்லா பெண்களுக்கும் ஒரு விதமான மன அழுத்தமானது இருக்கும் என்று சொல்லி இருந்தார்கள். எனக்கு அது அவ்வப்போது வந்து சென்றது. அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் செய்யும் வேலையை மிகவும் விருப்பப்பட்டு செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் மனச்சோர்வு அடைய மாட்டீர்கள.

குழந்தை பெற்ற 15 நாட்களில் குண்டூர்காரம் படத்தில் நான் நடித்தேன். நான் மிகவும் குண்டாக இருந்த காரணத்தால், என்னுடைய தன்னம்பிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இன்ஸ்டாகிராமில் என்னுடைய பதிவிற்கு கீழே என்னுடைய உடலை குறிப்பிடும் வகையி, பன்னி மாதிரி இருக்கிறீர்கள் என்றெல்லாம் கமெண்ட் செய்திருக்கிறார்கள். உங்கள் அம்மாவை பாருங்கள். உங்கள் அம்மாவும் இதே மாதிரியான ஒரு நடைமுறையை கடந்து தான் வந்திருக்கிறார்” என்று பேசினார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.