Actress Parvathy: கனமான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கிய நடிகை பார்வதி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Parvathy: கனமான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கிய நடிகை பார்வதி

Actress Parvathy: கனமான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கிய நடிகை பார்வதி

Manigandan K T HT Tamil
Apr 07, 2023 06:15 AM IST

பிச்சைக்காரன், ரோஜா கூட்டம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சசியின் பூ படத்தில் தான் தமிழில் முதல்முறையாக அறிமுகம் ஆனார்.

நடிகை பார்வதி திருவோத்து
நடிகை பார்வதி திருவோத்து

மேனன் என்பது ஜாதி பெயர் என்பதால் அதை நீக்கி விட்டார். தனது ஆரம்ப கால படங்களில் பார்வதி மேனன் என்றே டைட்டிலில் பெயர் வந்து கொண்டிருந்தது.

தற்போது அது மாறியிருக்கிறது. கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் 1988ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி பிறந்தார் நடிகை பார்வதி.

பிச்சைக்காரன், ரோஜா கூட்டம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சசியின் பூ படத்தில் தான் தமிழில் முதல்முறையாக அறிமுகம் ஆனார்.

ஆனால், இந்தப் படத்திற்கு முன்பே மலையாளத்தில் 2006ல் அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

பூ 2008இல் வெளியானது. பூ திரைப்படத்திற்காக தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார். விஜய் டிவியின் புதுமுக நடிகைக்கான விருதையும் வென்றார்.

இவரது பெற்றோர் பி.வினோத் குமார் மற்றும் டி.கே.உஷா குமாரி இருவரும் வழக்கறிஞர்கள். இவருக்கு ஓம் திருவோடு கருணாகரன் என்ற சகோதரர் உள்ளார்.

பள்ளி காலத்தில் திருவனந்தபுரத்திற்கு இவரது குடும்பம் குடிபெயர்ந்தது. பள்ளி படிப்பிற்கு பிறகு பி.ஏ. ஆங்கிலம் படித்தார்.

கிரன் டிவியில் வெற்றிகரமான நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆனார்.

பரதநாட்டியத்தை நன்கு கற்றுத் தேர்ந்தவர். Ennu Ninte Moideen படம் தான் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதில் காஞ்சனமாலா கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்தார். அந்தப் படம் ஓர் உண்மைச் சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.

தமிழில் சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் கனமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பார்.

சார்லி படத்தில் நடிகை பார்வதி
சார்லி படத்தில் நடிகை பார்வதி

தற்போது பா. ரஞ்சித் நடிகர் விக்ரமை வைத்து இயக்கி வரும் தங்கலான் படத்திலும் நடித்து வருகிறார்.

நவரசா இணையத் தொடரிலும் இவர் நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளியான சார்லி, டேக் ஆஃப், கூடே, வைரஸ், உயரே ஆகிய படங்களில் இவரது ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்தில் பெரிய வரவேற்பை பெற்றன.

பெண்களுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்துவரும் நடிகை பார்வதி, பல இளம் பெண்களுக்கு கேரளாவில் முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.