HBD Padmini : அனைத்திலும் நம்பர் 1.. காணக் கிடைக்காத எக்ஸ்பிரஷன்.. நாட்டிய பேரொளி.. நடிகை பத்மினி பிறந்த நாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Padmini : அனைத்திலும் நம்பர் 1.. காணக் கிடைக்காத எக்ஸ்பிரஷன்.. நாட்டிய பேரொளி.. நடிகை பத்மினி பிறந்த நாள் இன்று!

HBD Padmini : அனைத்திலும் நம்பர் 1.. காணக் கிடைக்காத எக்ஸ்பிரஷன்.. நாட்டிய பேரொளி.. நடிகை பத்மினி பிறந்த நாள் இன்று!

Divya Sekar HT Tamil
Jun 12, 2023 04:45 AM IST

இன்றும் பலரது உள்ளங்களில் நீங்கா நினைவுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் நாட்டிய பேரொளி பத்மினி. இன்று அவரின் பிறந்தநாள்.

நடிகை பத்மினி பிறந்த நாள்
நடிகை பத்மினி பிறந்த நாள்

தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ள பத்மினி பெங்காலி, ரஷ்ய மொழி படங்களிலும் நடித்துள்ளாராம். அவர் அறிமுகமான முதல் படமே பெங்காலி மொழி படமாம். வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் இவர் ஆடிய நடனம் இன்றளவும் ஒரு வியப்பாகவே பார்க்கப்படுகிறது. கண்ணும் கண்ணும் கலந்து என்ற பாடல் மூலம் பத்மினி யார் என்பதை நிரூபித்து இருப்பார். பாடலில் வரும் போட்டி நடனம் வாய்பிளக்கதவர்கள் இல்லை அந்த அளவுக்கு நடனத்தில வல்லவர்.

பத்மினியின் சினிமா பயணத்தில் சிவாஜியுடன் மட்டும் தான் அதிக படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்.கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் சிவாஜியுடன் மட்டும் ஜோடியாக நடித்திருந்தார் பத்மினி. ஒருபுறம், சிவாஜி- பத்மினி சூப்பர் ஜோடி என கொண்டாடிய ரசிகர்கள், எம்ஜிஆருக்கு ஏற்ற ஜோடியாக மதுரை வீரன், மன்னாதிமன்னன் திரைப்படங்களில் பத்மினியை கண்டு ரசித்தனர்.

அதுவும் மன்னாதிமன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆடாத மனமும் உண்டோ நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு என்ற பாடல் காட்சியில் நாட்டிய பேரொளியாக பத்மினி, அழகுமிகுந்த ராஜகுமாரனாக எம்ஜிஆர் தோன்றும் காட்சியை இன்றும் ரசிக்கும் பட்டாளம் உள்ளது. எம்.ஜி.ஆர்.,-பத்மினி ஜோடி சேர்ந்து நடித்த முதல் படம் மதுரை வீரன். எம்.ஜி.ஆர்.,யின் திரைப்பட வாழ்க்கையில் அந்த படத்தை முக்கியமான படம் என்று கூட கூறலாம்.

தில்லானா மோகனாம்பாள் திரைப்படமும், அதன் கதாநாயகன் சிக்கல் சண்முகசுந்தரமான சிவாஜி கணேசன், மோகனாம்பாளாக பத்மினியும் இன்றைக்கும் நம் மனதில் நடனமாடிதான் கொண்டிருக்கிறார்கள்.மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாடல் காட்சியில், முகத்தில் நவரசங்களை காட்டும் பத்மினியின் அழகு கொள்ளை கொள்ள வைக்கும். தனித்துவமும் வாய்ந்த பத்மினியின் கண்கள் ஒருபக்கம் நடிக்க, கால்கள் வேறொரு விதமாக நாட்டியமாடும்.

சிவாஜியுடன் இவர் நடித்த தங்கப்பதுமை இவரின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது. அழகிலும் நடிப்பிலும் திறமையிலும் பதுமை என்று கொண்டாடித் தீர்த்தார்கள் ரசிகர்கள். முகபாவனைகள், தெள்ளத்தெளிவான வசன உச்சரிப்புகளால் பத்மினி தனியிடம் பிடித்தார்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் எம்.ஆர்.ராதாவுடன் ஜோடி போட்டு நடித்த சித்தி படத்தை அவ்வளவு சீக்கிரத்தில் எவரும் மறந்துவிடமுடியாது. ஒவ்வொரு காட்சியிலும் பத்மினி, விஸ்வரூபமெடுத்துக் கொண்டே இருப்பார்.

வியட்நாம் வீடு திரைப்படத்தில் பிரஸ்டீஜ் பத்மநாபனின் மனைவி சாவித்திரியாக வாழ்ந்து காட்டியிருப்பார் பத்மினி. மடிசார் புடவையுடன் உடல்மொழியால், அன்பும் பணிவுமாக நிற்பதும் என அற்புதத் தம்பதியாக இருவருமே வாழ்ந்து காட்டியிருப்பார்கள். இப்படத்தில் இடம்பெற்றுள்ள உன் கண்ணில் நீர்வழிந்தால் பாடலைக்கேட்டு கலங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவ்வளவு அருமையாக நடிப்பை வெளிபடுத்தி அசத்தி இருப்பார். பூவே பூச்சூடவா படத்தில் பாசத்துக்கு ஏங்கும் பூங்காவனத்தம்மாவாக நடித்து அசத்தி இருப்பார். இன்று பத்மினி அவர்களின் பிறந்தநாள்.இன்றைய தினம் அவரை நினைவுகூறுவோம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.