HBD Oviya : களவாணி மூலம் மக்கள் மனதை களவாடிய நாயகி ஓவியா பிறந்தநாள் இன்று!
நடிகை ஓவியா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் அவரின் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ஓவியா 2007-ஆம் ஆண்டு கங்காரு என்ற மலையாள படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். பின்னர் அபூர்வா, புதிய முகாம் என்ற மலையாள திரைப்படங்களில் நடித்து வந்துள்ள இவர், தமிழ் சினிமாவில் 2009-ஆம் ஆண்டு "நாளை நமதே" என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
பின்னர் 2010ஆம் ஆண்டு நகைச்சுவை கலந்த காதல் படமாக வெளியான களவாணி படத்தில் நடித்தார். சற்குணம் இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர், அதன் பிறகு தமிழில் கலகலப்பு, மெரினா, மூடர்கூடம், மத யானைக்கூட்டம், யாமிருக்க பயமே என தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார்.
விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய ஓவியா சினிமாவை விட அந்த நிகழ்ச்சி மூலமாக தான் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.
யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், காலை நடனமும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது. முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே ஓவியா ரசிகர்கள் தான்.
பிக்பாஸ் நிகச்சியில் ஆரவ் மீது ஓவியாவிற்கு காதல் மலர ஆனால் அதனை ஆரவ் ஏற்க மறுத்தார். இதனால் பயங்கர மன அழுத்தத்திற்கு ஆளான ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்கொலைக்கு முயன்றார் என கூறப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த இவருக்கு மேலும் பட வாய்ப்புகள் குவிந்தது. அதன்படி 90ML என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் வாயிலாக பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. பின்னர் இவரது நடிப்பில் அடுத்து 'பூமர் அங்கிள்' என்ற படம் வெளியானது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என படங்களில் நடித்து வந்தார்.
இவர் திருமணம் குறித்து அவ்வபோது வதந்திகள் பரவிவந்த நிலையில் இவர் ஒரு பேட்டில் இதுகுறித்து விளக்கம் அளித்திருப்பார். அதில், "எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை. திருமணம் குறித்து இனிவரும் காலங்களில் யாரும் என்னிடம் கேள்விகளைக் கேட்க வேண்டாம். இது போன்ற கேள்விகள் எரிச்சலூட்டுகிறது."என தெரிவித்திருப்பார்.
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைக்கான விருதினை களவாணி, முத்துக்கு முத்தாக திரைப்படத்திற்காக பெற்றுள்ளார். இன்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இவரின் புகைப்படங்களை பகிர்ந்து அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்