MEGHA AKASH: ஜோடி ரொம்ப நல்லா இருக்கே.. ஆறு வருட காதலரை கை பிடிக்கும் மேகா ஆகாஷ்!-actress megha akash got engaged with lover and shares photos in instagram - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Megha Akash: ஜோடி ரொம்ப நல்லா இருக்கே.. ஆறு வருட காதலரை கை பிடிக்கும் மேகா ஆகாஷ்!

MEGHA AKASH: ஜோடி ரொம்ப நல்லா இருக்கே.. ஆறு வருட காதலரை கை பிடிக்கும் மேகா ஆகாஷ்!

Aarthi Balaji HT Tamil
Aug 23, 2024 02:12 PM IST

MEGHA AKASH: நடிகை மேகா ஆகாஷ் தனது காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்த புகைப்படங்களை வெளியீட்டு உள்ளார்.

MEGHA AKASH: ஜோடி ரொம்ப நல்லா இருக்கே.. ஆறு வருட காதலரை கை பிடிக்கும் மேகா ஆகாஷ்!
MEGHA AKASH: ஜோடி ரொம்ப நல்லா இருக்கே.. ஆறு வருட காதலரை கை பிடிக்கும் மேகா ஆகாஷ்!

தகவல் இல்லை

அதே நேரத்தில் மணமகன் சாய் விஷ்ணு பற்றிய எந்த தகவலும் வெளிவரவில்லை. சாய் விஷ்ணு அரசியல் தலைவரின் மகனா என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

தாமதமாக தொடங்கிய பயணம்

2017 ஆம் ஆண்டு, பாலாஜி தரணிதரன் இயக்கிய ஒரு பக்க கதை என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் மேகா ஆகாஷ் திரைப்பட உலகில் நுழைந்தார். படத்தின் நாயகனாக காளிதாஸ் ஜெயராம் நடித்திருந்தார். காளிதாஸ் நடித்த முதல் படமும் ஒரு பக்க கதை தான். ஆனால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கிய,  ’ எனை நோக்கி பாயும் தோட்டா ’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் மேகா ஆகாஷ். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகியாக நடித்து இருந்தார். பின்னர் நடிகை தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தீவிரமாக மாறினார். மேகா ஆகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விஜய் ஆண்டனியின்,  மழை படிக்காத மனிதன்.

திடீரென நிச்சயதார்த்தம் முடிக்க காரணம் என்ன?

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து பிஸியாக இருக்கும் மேகா ஆகாஷ், திடீரென தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். என் ஆசை நிறைவேறியது, நான் முன்பை விட மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் இருந்தேன். 

வரிசை கட்டும் படங்கள்

நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அவர், எனது காதல் வாழ்க்கையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். கடந்த வருடம் மட்டும் ஏழு படங்களில் நடித்துள்ளார் மேகா ஆகாஷ். இந்த ஆண்டு மூன்று முதல் நான்கு படங்கள் செய்து உள்ளார், தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஆறு ஆண்டு காதல்

பொதுவாக ஹீரோயின்கள் தொடர்ந்து படங்களில் நடிக்கும் போது திருமணத்திற்கு ஓகே சொல்ல மாட்டார்கள். ஆனால் மேகா ஆகாஷ் வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார். மேகா ஆகாஷ் சாய் விஷ்ணுவை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. மேகா ஆகாஷ், சாய் விஷ்ணுவை கடந்த 6 ஆண்டுகளாக காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. 

நடிகை மேகா ஆகாஷுக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.