Actress lisha chinnu: ‘அட்ஜஸ்ட்மெண்ட்.. பிடிச்சா போக வேண்டியது தான்..’ போர் தொழில் லிசா பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Lisha Chinnu: ‘அட்ஜஸ்ட்மெண்ட்.. பிடிச்சா போக வேண்டியது தான்..’ போர் தொழில் லிசா பேட்டி!

Actress lisha chinnu: ‘அட்ஜஸ்ட்மெண்ட்.. பிடிச்சா போக வேண்டியது தான்..’ போர் தொழில் லிசா பேட்டி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jul 07, 2023 06:00 AM IST

கல்யாணம் பண்ணு ஒவ்வொருக்கும் இருக்கும் எண்ணம், ‘நாம ஜாலியா வாழப் போறோம்’ என்பது தான். அதக்குள்ள போன பிறகு தான் அதில் உள்ள கஷ்டம் தெரிகிறது.

போர் தொழில் படத்தில் நடித்த லிசா சின்னு
போர் தொழில் படத்தில் நடித்த லிசா சின்னு (lishachinnu Instagram)

‘‘போர் தொழிலில் படத்தில் 2 நிமிடம் தான் நான் வருகிறேன். ஆனால், படம் பார்த்தவர்கள் என்னைப் பற்றி பேசுகிறார்கள். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் இந்த மாதிரி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. படத்தை கொண்டாடுகிறார்கள். 

மக்களின் பாசிட்டிவ் ரிவியூ வருகிறது. படத்திற்கு முன்பே எனக்கு அதற்கான கிரடிட் வந்துவிட்டது. நான் க்யூட் என்று சொல்வார்கள், ஆனால் எனக்கு வந்தது க்யூட்டான ரோல் இல்லை, கொடூரமான ரோல். 

டிம்பிளா இருப்பதால், யாரும் என்னிடம் இதுவரை காதல் சொன்னதில்லை. படத்திற்கு பின், டிம்பிளா எத்தனை பேரை சாகடிக்கப் போற என்று எனக்கு மெஜேஜ் வருகிறது. என்னுடைய இன்ஸ்டாகிராம் ஓப்பன் பண்ணாலே, டிம்பிள் கியூன், டிம்பிள் சீதா என்றெல்லாம் கமெண்ட்ஸ் வருகிறது. 

என்னை டிம்பிளுக்கான தான் தேடி வந்து இந்த கதாபாத்திரத்தை கொடுத்தார்கள். ஆனாலும் ஆடிசன் போனேன். ஸ்கிரிப்ட் படிக்கும் போதே, டயலாக் படிக்கும் போதே தெரிந்துவிட்டது, இது வேற மாதிரி கேரக்டர் என்று. நான் படிக்கும் போதே, ‘இது எனக்கு ஒத்துவராது’ என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு தான், இயக்குனர் என்னிடம் விளக்கினார். இயக்குனர் விக்னேஷ் விளக்கியதால் தான் நான் அந்த கதாபாத்திரத்தை ஏற்றேன். 

கல்யாணம் பண்ணு ஒவ்வொருக்கும் இருக்கும் எண்ணம், ‘நாம ஜாலியா வாழப் போறோம்’ என்பது தான். அதக்குள்ள போன பிறகு தான் அதில் உள்ள கஷ்டம் தெரிகிறது.நிறைய பேர் அப்படி பிரிந்தவர்களை பார்க்கிறோம். இப்போ இருக்கிற பெண்கள், அவர்கள் வாழ்க்கையை அவர்களே தீர்மானிக்கிறார்கள். கணவர் இல்லாமல் துணிந்து தனிமையில் வாழ்கிறார்கள். 

எப்போதுமே காம்ரமைஸ் பண்ணி மற்றவர்களுக்காக வாழ வேண்டிய அவசியம் இல்ல. நான் ரொம்ப எமோஷனலான பொண்ணு. நான் ஒருவரிடம் நெருங்கிவிட்டால் அவர்களை விட்டுக் கொடுக்க மாட்டேன். நான் பேசிக்கொண்டே இருப்பேன். 

நான் 5 ஆண்டுகளுக்கு முன்பே நடிக்க வேண்டியது. சுந்தர் சி சார் படத்தில் எல்லாம் நடிக்கும் வாய்ப்பு வந்தது. நான் தான் நடிக்கவில்லை. அப்பா, அம்மா வேலை பண்ணாங்கனா பரவாயில்லை. என் அப்பா இறந்த பிறகே 18 வயதில் நான் வேலைக்கு போனேன். என் சம்பளம் குடும்பத்திற்கு தேவைப்பட்டது. அதனால் நான் படத்தில் நடிக்கவில்லை. சினிமா அவ்வளவு ஈஸியாக எனக்கு எப்போ தெரியவில்லை. இனி வரும் படங்களை மிஸ் செய்யப் போவதில்லை. 

நானும் ஐஸ்வர்யா ராஜேஷூம் மானாட மயிலாட 5 அவங்க பண்ணும் போது, நான் 6 பண்ணிட்டு இருந்தேன். ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போ பண்ற ரோல் பார்க்கும் போது மகிழ்ச்சியா இருக்கு. அவளை எனக்கு அப்போ இருந்து தெரியும். அவள் எடுக்கும் கதாபாத்திரங்கள் சிறப்பா இருக்கு. 

பி.ஆர்., வேலை நான் செய்து கொண்டிருக்கிறேன். இது ஆண்கள் கோலோச்சும் வேலை என்கிறார்கள். ஆனால், இதை செய்வதால் எனக்கு எந்த சிரமமும் இல்லை. என்னுடைய அலுவலகத்தில் 75 சதவீதம் பெண்கள். அந்த சக்தியும் என்னை இன்னும் உந்துகிறது. இந்த வேலையால் தான் நான் சினிமாக்குள் வந்தேன். அதை என்னால் எப்போதும் விட முடியாது. 

சினிமாவில் பி.ஆர்., தான் அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். என்னிடம் அந்த விசயம் பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இங்கு அந்த மாதிரி விசயம் இருப்பதாக தெரியவில்லை. அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கு; இல்லை என்று சொல்லமாட்டேன். 

நாம் ஒப்புக் கொண்டால் தானே எதுவும் இங்கு முடியும். நாம் முடியாது என்று சொல்லிவிட்டால், எப்படி முடியும்? சோஷியல் மீடியா இன்று உச்சத்தில் இருக்கிறது. நான் சொல்வது தவறாக கூட போகலாம். நீங்க ஓகே சொன்னால், ஓகே தான். இல்லை என்றால் இல்லை, அவ்வளவு தான். 

நீங்கள் மறுத்தால் உங்கள் வாய்ப்பு போகலாம். அதற்காக வருத்தப்படக் கூடாது. நாம் முயற்சி பண்ணிக் கொண்டே இருந்தால் வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும். பிடிக்காத ஒரு விசயத்தை செய்து விட்டு, அதன் பின் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல், பிடிக்கவில்லை என்றால் தவிர்ப்பது நல்லது,’’
என்று அந்த பேட்டியில் லிசா கூறியுள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.